கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உண்மைகளை தவிர உலகெங்கிலும் உள்ள டிராகன் கோயில்கள் பல்வேறு வடிவமைப்பு, மற்றும் சிற்பங்களால் தனித்துவமானவை மற்றும் அரிதானவை. எனவே கலையை விரும்பும் தூய கண்கள் இந்த பண்டைய அழகை போற்றுவதை நிறுத்தாது.
1999 _ல் ஜப்பானின் ரெவரெண்ட் ‘நிச்சிகி கட்டோவால்' திறந்து வைக்கப்பட்டது. அன்னை ‘நொரிகா ஒகாவா' சொசைட்டியால் நிறுவப் பட்ட இந்த கோயிலில் ஒரே ஒரு சந்தண மரத்தில் செதுக்கப்பட்டதாக நம்பப் படும் ஓரே புத்தர் சிலை உள்ளது. இது நாக்பூருக்கு அருகில் உள்ள காம்ப்டீயில் அமைந்துள்ள அழகான புத்த கோயில் ஆகும்.
டிராகன் பேலஸ் புத்த கோயில் தாமரை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இதனுடைய அற்புதமான கட்டிடகலை, அமைதியான சூழல் மற்றும் 18 அடி உயர புத்தரின் சிலை ஆகியவற் றிற்காக புகழ் பெற்றது. இந்திய_ஜப்பான் நட்புறவின் சின்னமாக உள்ளது.
டிராகன் அரண்மனை பசுமையான புல் வெளிகளால் சூழப்பட்டது. மற்றும் பிரகாசமான வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோட்டம் அந்த இடத்தை மிகவும் அழகாக்குகிறது. தியான நேரத்தில் மக்கள் ‘நங்கு,மாயோ_ஹோ, ரெங்கே_கியோ' என்று கோஷமிடுவார்கள்.
ஈரானில் உள்ள இந்த இடைக்கால கோயிலின் குகைகளின் பாறைகளை இரண்டு கடுமையான சீன டிராகன்கள் பாதுகாக்கின்றன மேலும் அவை ஆசியாவின் இந்த பகுதிக்குள் தனித்துவ மான கட்டடக்கலைச் சேர்க்கைகள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த கோயிலை ஆரம்பத்தில் சசானிட் காலத்தில் மித்ராஸின் (ஒளி மற்றும் உண்மையின் கடவுள்) ஜோரா _ஆஸ்திரிய (பின்பற்றுபவர்களால் பயன் படுத்தப்பட்டது) ஏறக்குறைய 10 அடி உயரம் வரை நீண்டிருக்கும் டிராகன்கள், பூக்கள் போன்ற பாரம்பரிய இஸ்லாமிய வடிவமைப்பு களால் சூழப்பட்டுள்ளன.
க்ரீன் டிராகன் கோயில் என்று அழைக்கப்படும் கிங்லாங் கோயில், பிக் வைலட் கூஸ் பகோடாவி லிருந்து 1.5கி.மீ தொலைவில் பண்டைய நகரமான சியானின் தென் கிழக்கில் அமைந்துள்ளது. இது பழங்கால கட்டிடக் கலை மற்றும் கலாச்சார நினைவு சின்னங்கள், அருங் காட்சியகம் கொண்ட புகழ் பெற்ற புத்த கோயிலாகும் கிங்லாங் கோயில் எஸோடெரிக் பௌத்தத்தின் தொட்டில்களில் ஒன்றாகும். இது எட்டு புத்த பிரபுகளில் ஒன்றாகும்.
சீனாவின் ஷாங்கி மாகாணத்தில் உள்ள ஒரு தாவோயிஸ்ட் கோயிலாகும் இது கிங்குவாங்ரென் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த கோயிலில் சீனாவின் இரண்டாவது பழமையான, மரகட்டிடமான பிரதான மண்டபம் உள்ளது. இது ஐந்து விரிகுடாக்களை யும் மற்றும் இடுப்பு_கேபிள் கூரையையும் கொண்டுள்ளது.
ப்ளூ டிராகன் கோயில் டாங் வம்சத்தின் (618_907) புகழ் பெற்ற புத்த கோயிலாகும். ப்ளூ டிராகன் கோயில் செர்ரி பழங்களை அனுபவிக்க கூடிய இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவில்லாத நீரோடை போல சுற்றுலா பயணிகள் அதன் அழகை பாராட்ட வருகிறார்கள்.
பாங்காக் நகரத்தில் ஏராளமான அழகான கோயில்கள் உள்ளன. ஒரு பெரிய முயல் மற்றும் பிற புதிரான சிலைகள் கோயிலையும், அதன் தோட்டத்தையும் சுற்றி இணக்கமாக ஒரு அழகான விரிவான வேலைபாடுகளை கொண்டது. இங்கு மேலே ஏறி செல்லும் படி கட்டுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்களோ, வெளிநாட்டவரோ உள்ளே செல்ல அனுமதிக்க படவில்லை
முடிந்தால் சுவாரஸ்யமான டிராகன் கோயில்களுக்கு சென்று அதன் தனித்துவமான அழகை கண்டு ரசியுங்கள்