7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பம் கண்டுபிடிப்பு… எங்கு தெரியுமா?

Statue
Statue
Published on

குவைத்தில் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இதுகுறித்தான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

உலகில் பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பொம்மைகள் போன்றவை இன்றும் கண்டுபிடிக்கப்பட்டுதான் வருகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றாலே நாம் ஆச்சர்யப்படுவோம். ஆனால், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிற்பம் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொன்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா என்ன??

ஆம்! குவைத்தில் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பத்தை கண்டுபிடித்தனர். அரேபிய தீபகற்பத்தின் மைய பகுதியில் உள்ள Bahra 1 அகழாய்வு தளத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண் சிற்பம், நீண்ட தலைகள், சுருங்கிய கண்கள் மற்றும் ஒட்டிய மூக்கு போன்ற தனித்துவ அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த சிற்பம் குறித்தான ஆய்வு நடைபெற்று வந்தது. தற்போது இதுகுறித்தான செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சிற்பம் மெசபடோமியாவில் தோன்றிய Ubaid கலாச்சாரத்தின் கலை வடிவமைப்புகளுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. உபைட் சமுதாயத்தில் குழந்தைகளின் தலை வடிவத்தை மாற்றும் ஒரு முறை இருந்து வந்தது. இதனை தலை வடிவ மாற்றம் என்று கூறுவார்கள். இதன் செயல்பாடு குறித்த பல கருத்துக்களை இந்த சிற்பம் விளக்குவதாகவும், அதனால் இதனை சமூக சின்னமாக மக்கள் வழிபட்டு வந்த சிலையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அகழாய்வு செய்யப்பட்டு வரும் பஹ்ரா தளம் 1 குளிர்ச்சியூட்டும் பானைகள் தயாரிக்கப்பட்ட இடமாக இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. 7000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்களின் கலைநுனுக்கத்தையும், திறமைக்கும் சான்றாக இந்த சிற்பம் மாறியுள்ளது.

மேலும் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவென்றால், இந்த சிற்பம் மர்மம் மிகுந்த வேற்றுகிரக உயிரினங்களைப் போல் செதுக்கப்பட்டிருப்பதுதான்.

அப்படியென்றால், ஏலியன் மீதான நம்பிக்கை அத்தனை வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறதா? அல்லது நாம் நினைக்கும் அதே ஏலியன் வடிவத்தை அந்த மக்கள் செய்திருக்கிறார்கள் என்றால், உண்மையாகவே ஏலியன்கள் அப்போது இருந்திருக்கிறதா? போன்ற பல கேள்விகளை இந்த சிற்பம் எழுப்புகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com