9/11 தாக்குதல்… அமெரிக்காவையே மாற்றிய நிகழ்வு!

9/11 attack
9/11 attack
Published on

2001 செப்டம்பர் 11 அன்று நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் உலகையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும். இந்த தாக்குதல் அமெரிக்காவின் மீதான உலகின் பார்வையை முற்றிலுமாக மாற்றி அமைத்தது மட்டுமல்லாமல், உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பதிவில் 9/11 தாக்குதல் அமெரிக்காவை எவ்வாறு மாற்றியது என்பதை பற்றி பார்க்கலாம். 

9/11 தாக்குதலுக்கு முன் அமெரிக்கா உலகின் ஒரே சூப்பர் பவர் நாடு என்ற நிலையில் இருந்தது.‌ அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் ராணுவம் உலகிலேயே மிகப்பெரியதாக இருந்தது. அச்சமயத்தில் அமெரிக்கா உலகின் ஜனநாயகத்தின் தாயகம் என்று கருதப்பட்டது. ஆனால் 9/11 தாக்குதல் இந்த பார்வை முற்றிலுமாக மாறியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தனது பாதுகாப்பை பற்றி அதிக கவலை கொள்ளத் தொடங்கியது. இதன் விளைவாக அமெரிக்கா உலகின் பிற நாடுகளுடன் அதிக மோதலில் ஈடுபடத் தொடங்கியது. அமெரிக்கா தன் ராணுவத்தின் செலவுகளை அதிகரித்து, தன் குடிமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியது. 

9/11 தாக்குதலுக்கு பிறகு உலகின் மற்ற நாடுகள் அமெரிக்காவை எவ்வாறு பார்க்கின்றன என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சில நாடுகள் அமெரிக்காவை ஆதரித்த நிலையில் மற்ற நாடுகள் அமெரிக்காவை எதிர்த்தன. அமெரிக்காவை ஆதரித்த நாடுகள், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அமெரிக்காவுடன் போரில் பங்கேற்றன. 

அமெரிக்காவை எதிர்த்த நாடுகள் அவர்களின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்து, அமெரிக்கா பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறினார்கள். இதன் பின்னர் அமெரிக்கா தீவிரவாதத்தை ஒழிப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டது. அல்காய்தா மற்றும் தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போர் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் இந்த கொள்கையின் விளைவாகவே நடந்தன. 

இதையும் படியுங்கள்:
பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்வது ஏன்?
9/11 attack

இந்தத் தாக்குதலால் அமெரிக்காவின் உள்நாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு எதிரான உணர்வு அதிகரித்தது. இதன் விளைவாக அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றியது. குடிமக்களின் சுதந்திரம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டதால், அமெரிக்காவில் இனவெறி மற்றும் மதவெறி உணர்வுகள் அதிகரித்தன. இதனால், அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பல நாடுகளில் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொண்டனர். இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்தது. இது உலகெங்கிலும் உள்ள மக்களிடையே பயம் மற்றும் வெறுப்பை ஏற்படுத்தியது. 

இந்த அளவுக்கு 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்காவின் நிலைமையை முற்றிலுமாக மாற்றியது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com