சிற்பியின் பெயரால் அழைக்கப்படும் கலைக்கோயில்!

A Temple named after the sculptor
A Temple named after the sculptorhttps://www.businesstoday.in
Published on

ந்தவொரு ஆலயமும் அதில் வீற்றிருந்து அருளும் பிரதான தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒரு சிற்பியின் பெயரால் அழைக்கப்படும் கோயில் ஒன்று கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.

ஹொய்சாள நாட்டை (இன்றைய கர்நாடகா) சேர்ந்த ராமப்பா என்ற ‌சிற்பியின் தலைமையில் திட்டமிடப்பட்டு, சுமார் 14 வருடங்களாக கட்டப்பட்டது இராமலிங்ககேஸ்வரர் சிவாலயம். இக்கோயில் அதில் அருளும் சிவபெருமானின் பெயரைக் கொண்டு அழைக்கப்படாமல், அக்கோயிலை நிர்மாணித்த சிற்பியின் பெயரால், 'ராமப்பா ஆலயம்' என்றே அழைக்கப்படுகிறது.

https://www.nativeplanet.com

நட்சத்திர வடிவ மேடையில், கம்பீரமாக நிற்கும் இந்தக் கோயில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள், புராண நிகழ்வுகளை விளக்கும் அற்புதமான சிற்பங்கள், பேரழகு மதனிகா சிற்பங்கள் ஆகியவற்றால் செழுமையாக்கப்பட்டுள்ளது.

சிவப்பு கற்கள் கொண்டு சுவர் கட்டுமானம் அமைக்கப்பட்ட இக்கோயிலில் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள், சிற்பங்கள் போன்றவை மட்டும் கறுப்பு நிற பஸால்ட் கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

https://karnatakatravel.blogspot.com

இவ்வாலயத்தில் காகதீய கலையின் தலைசிறந்த படைப்புகளான மதனிகா சிற்பங்களின் பேரழகு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மெல்லிய உடல்கள் உடன் நளினமான விரல்களும், காதல், கூச்சம், கோபம், வலி என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவனைகளுடன் மதனிகா சிற்பங்கள் ராமப்பா கோயிலின் வெளிப்புற சுவர்களில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நவீனத்துவத்துடன் போட்டியிடும் வகையில் கூடுதல் உயரம் கொண்ட காலணிகள் (high heels) அணிந்த மதனிகா சிற்பம் உலகப் புகழ் பெற்றது. எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட ஸ்கர்ட் அணிந்த பெண்ணின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. தன் காலில் இருந்து முள்ளை அகற்றும்போது ஏற்படும் வலியை முகத்தில் வெளிப்படுத்தும் இந்த சிற்பம் சிற்பியின் சிறந்த திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

https://www.nativeplanet.com

மேலும், பாம்புடன் நாகினி நடனம், இசைக்கருவி வாசிப்பது போன்ற பல்வேறு வகையான சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. நிற வேறுபாடு மற்றும் சிமெண்ட் வேலைகள் மற்றவற்றில் இருந்து அந்த சிற்பங்களை வேறுபடுத்தி அடையாளம் காண உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
அழகிலும் பேரழகு அரோரா போரியாலிஸ்!
A Temple named after the sculptor

இந்த ஆலயம் தெலங்கானா மாநிலம், வாரங்கல்லிலிருந்து 70 கி மீ தொலைவில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.1213ல் கட்டப்பட்ட இந்த கோயிலையும், அதன் வியக்க வைக்கும் சிற்பங்களையும் பார்த்து பிரமிக்க ஒருமுறை சென்று வருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com