தமிழரின் தொன்மையான தற்காப்புக்கலை: ஒரு பார்வை!

Oldest Martial Art Of Tamil
Oldest Martial Art Of TamilImage Credits: Medium
Published on

லகத்திலேயே மிகவும் தொன்மையான தற்காப்புக்கலை எங்கே உருவானது என்பதை அறிவீர்களா? அதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களைத்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

களரி பயட்டுதான் உலகத்தின் மிகவும் தொன்மையான தற்காப்புக் கலையாகும். இன்று குங்பூ, கராத்தே, பாக்ஸிங் போன்ற தற்காப்புக்கலைகள் வந்திருந்தாலும் இவற்றுக்கெல்லாம் ஆணி வேராக இருப்பது களரி பயட்டேயாகும். இதை உருவாக்கி, நமக்கு போதித்தவர் அகத்திய முனிவர். களரி என்பது உடற்பயிற்சி போன்ற நிலைகளைக் கடந்து திகழ்கிறது. களரியை ஆழமாகக் கற்கும்போது அது யோகாவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கிறது.

அகத்தியருக்கு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்ததால், கொடிய மிருகங்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து, களரி மனிதர்களின் மீது பிரயோகிப்பது என்பது பின்நாட்களில் உருவானது. களரி தற்காப்புக்கலையில் ஒருவரை குறைவான உயரத்தில் தாக்கும்படியான வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும். அதனால் களரி விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட தற்காப்புக்கலையாகும்.

பரசுராமரும் மகத்தான களரி ஆசானாகத் திகழ்ந்தார். பரசுராமரின் பாணி மலபாரிலும், அகத்தியருடைய பாணி தெற்கேயும் புகழ் பெற்றது. பரசுராமரின் தற்காப்புக்கலையில் ஆயுதங்களைப் பயன்படுத்தினார். ஆனால், அகத்தியர் ஆயுதமின்றி கைகளினாலேயே தற்காப்புக்கலையைக் கற்பித்தார்.

பழங்காலத்தில் தமிழ் அரசர்கள் களரியை கற்றுள்ளனர். பிற்காலத்தில் பெரிய மருது களரி சுழற்றுவதில் வல்லவராக இருந்துள்ளார். ‘களரி’ என்றால் களம் என்றும் ‘பயட்டு’ என்றால் பயிற்சி என்றும் பொருள்படுகிறது.

களரி பயிற்சி தற்போது கேரளாவிலும், தென்தமிழகத்திலேயுமே உள்ளது. களரி கேரளாவில் அதிக அளவில் பயிலப்படுகிறது. எனவே, இது கேரளாவின் பாரம்பரிய கலை என்று எல்லோராலும் தவறாக எண்ணப்படுகிறது. இந்தக் கலையில் வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தி பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. களரியில் வடக்கன் களரி, தெக்கன் களரி என்று இருவகையாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றியடைய இந்த மூன்று பயங்களை கைவிடுங்கள்!
Oldest Martial Art Of Tamil

களரியை கற்றுக் கொடுக்கும் குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பதுதான் இதன் சிறப்பு. பண்டைய காலத்தில் போர் நேரங்களில் ஏற்படும் காயத்தை ஆற்றுவதையும் இந்த குரு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது தமிழர்களின் மரபாக திகழ்ந்தது. களரியின் அருமை தெரிந்ததால்தான் இன்றைக்கும் கேரளாவில் முழுநேரமாக இதை கற்றுக்கொள்கிறார்கள்.

களரி பயட்டில் மருத்துவமும் கற்றுத்தரப்படுகிறது. ‘மெய்யுழிச்சல்’ எனப்படும் சிறப்பு மசாஜ் முறையும் களரி பயிற்சியில் உண்டு. களரி பயிற்சி செய்யும் வீரர்களின் நரம்பு பிரச்னைகளை தைலங்களால் நீவிவிட்டு சிகிச்சை முறையை மேற்கொள்வதாக இது கூறுகிறது. இத்தகைய சிகிச்சை கேரளாவில் தற்போது ஆயுர்வேத சிகிச்சைகளாக நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com