மகள் மீதுள்ள அன்பினால் தோன்றிய கலை: ராமாயணம் முதல் கலியுகம் வரை நிலைத்து நிற்கும் மதுபானி ஓவியம்!

மகள் மீதுள்ள அன்பினால் தோன்றிய கலை: ராமாயணம் முதல் கலியுகம் வரை நிலைத்து நிற்கும் மதுபானி ஓவியம்!
https://www.directcreate.com/

மது இந்திய நாட்டின் பல்வேறு பாரம்பரியமிக்க கலைகளுள் ஒன்றுதான் மதுபானி ஓவியம். இது பீகாரில் உள்ள மித்திலா என்ற சமூகத்தின் பாரம்பரிய கலை. இந்த மதுபானி ஓவியக் கலையின் பிறப்பிடம், எங்கெல்லாம் பயன்படுத்தினார்கள், இப்போது எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் போன்றவற்றை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

வரலாறு: மதுபானி ஓவியக்கலை ராமாயண காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அரசர் ஜனகர் தனது மகள் சீதையின் திருமண நிகழ்வானது மக்களின் மனதில் காலம்காலமாக நிலைத்து நிற்க வைக்கவேண்டும் என்பதற்காக ஒரு திட்டம் தீட்டினார். அப்போதுதான் ஓவியக் கலைஞர்களிடம் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் ஓவியமாகத் தீட்டவேண்டும் என்று கூறினார். சீதையின் இந்த திருமண நிகழ்வை எப்படி ஒரு சாதாரண ஓவியமாக தீட்டமுடியும்? அதற்கென்று புதுமையாக உருவாக்கப்பட்டது ஒரு ஓவியம். அதுதான் மதுபானி.

பல வருடங்கள் மதுபானி ஓவியத்தின் புகழ் உச்சத்தில் இருந்தது. பின்னர் காலங்கள் செல்லச் செல்ல மதுபானி ஓவியம் இருந்ததே தெரியாமல்போனது. மீண்டும் 1934ம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி வில்லியம் ஆர்ச்சர் நிலநடுக்கத்தினால் பீகாரில் ஏற்பட்ட சேதங்களைப் பார்க்க சென்றார். அந்த நிலநடுக்கம் காரணமாக பல பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அப்போதுதான் ஆர்ச்சரால் மீண்டும் மதுபானி கலை கண்டுபிடிக்கப்பட்டது. குகைகளிலும், களிமண் வீடுகளிலும் மதுபானி ஓவியங்கள் பாதி சிதைந்து இருந்ததை அவர் பார்த்தார். பாறைகளில், குகைகளில் தெரிந்த பாதியை வைத்தும், அங்கிருந்த சில வயதானவர்கள் கூறிய மதுபானி ஓவியத்தின் நுணுக்கங்கள் வைத்தும் ஓவிய கலைஞர்கள் மீண்டும் மதுபானி கலையை உயிர்த்தெழச் செய்தார்கள்.

பழங்காலத்தில் மதுபானி ஓவியத்தைக் கரித்துண்டுகள் வைத்துதான் வரைந்தார்களாம். பின் தீக்குச்சி அல்லது விரல்கள் பயன்படுத்தியே வரைய ஆரம்பித்தார்கள். வண்ணமிக்க இந்த ஓவியத்திற்கு இயற்கை மூலமே வண்ணங்களைத் தயாரித்தார்கள். இலைகள், வேர்கள், பூக்கள் ஆகியவற்றைக்கொண்டு வண்ணங்கள் தயாரித்தார்கள்.

மதுபானி ஓவியத்தின் வடிவம்: மதுபானி ஓவியம் வண்ணங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஓவியத்தில் மீன், யானை, மயில் போன்றவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தமும் உள்ளது.

மீன்: அதிர்ஷ்டம் மற்றும் வளமான வாழ்வுக்கு.

தாமரை:  தூய்மை மற்றும் தெய்வீகத்திற்கான அடையாளம். மேலும் இது விஷ்ணு கடவுளைக் குறிக்கும்.

மயில்: இது அழகையும், மென்மையையும் குறிக்கிறது. மயில் இறந்தாலும் அதனுடைய இறகு சிதையாது. அதேபோல் நம்முடைய புகழும் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

சூரியன் சந்திரன்: இது ஆண், பெண் மற்றும் நல்லது, கெட்டது என்பதைக் குறிக்கிறது.

யானை: பலம் மற்றும் வெற்றியைக் குறிக்கிறது.

புலி: தைரியம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது.

காக்கை: புத்திக்கூர்மை, வெற்றி மற்றும் எச்சரிக்கையாக இருப்பதைக் குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
சென்னையில் ஒரே இடத்தில் 3 அருங்காட்சியகங்கள்!
மகள் மீதுள்ள அன்பினால் தோன்றிய கலை: ராமாயணம் முதல் கலியுகம் வரை நிலைத்து நிற்கும் மதுபானி ஓவியம்!

பயன்படுத்தும் முறைகள்:

* மதுபானி ஓவியத்தில் டான்ட்ரிக்ஸ் என்ற ஓவிய வகையை வீட்டின் சுபகாரியங்களுக்கும் பிரார்த்தனை செய்யும் இடங்களிலும் வைக்கலாம்.

* கோபா ஓவிய வகையை திருமண மண்டபங்களில், மணமகன், மணப்பெண் வீடுகளில் வாங்கி வைக்கலாம். கோபா வகை ஓவியம் வைத்தால், சிவனுடைய ஆசிர்வாதம் எப்போதும் கூடவே இருக்கும் என்பது அர்த்தம்.

* பார்னி என்ற மதுபானி ஓவிய வகையை ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். மேலும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் வைக்கலாம்.

* காட்னா என்ற வகை மதுபானி டிசைனை கைகளில் டாட்டூ போடுவதற்குப் பயன்படுத்தலாம்.

* காட்சினி என்ற வகை ஓவியங்கள் இரண்டு வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தி மிருகங்களை வரையும் வகை. இது வீடுகளில், மரச்சாமான்களில் (நாற்காலி, டேபிள் போன்றவை) ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com