

பீகாரின் கயாவில் 1200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புத்த மடாலயத்தின் எச்சங்கள் மற்றும் அரிய கலை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படும் ஒரு பிரம்மாண்டமான புத்த மடாலயத்தின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செழிப்பான மனிதக் குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகள் இவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், இங்கு ஏராளமான மட்பாண்ட எச்சங்கள், சிலைகள், நேர்த்திக்கடன் ஸ்தூபிகள் மற்றும் பிற அரிய தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
போத் கயாவின் தென்மேற்கிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் மற்றும் பாட்னாவிலிருந்து 140 கி.மீ தொலைவிலும் உள்ள துப்பா கிராமத்தில் அமைந்துள்ள இந்தத் தளத்தை, வெளிப்பகுதியிலிருந்து பார்க்கும்போது சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது, ஆனால் மேலதிக ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சியின் மூலம் இது விரிவடையக்கூடும்.
மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவிடமிருந்து (CABA) அகழ்வாராய்ச்சி உரிமத்தைப் பெற்ற பிறகு, மே 9 அன்று அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கிய மகத் பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய மற்றும் ஆசிய ஆய்வுகள் துறையைச் சேர்ந்த குழுவினர் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்கள்.
செங்கல் கட்டமைப்புகள், சுவர்களில் மாடங்களைக் கொண்ட சிறிய அறைகள், செங்கல் மற்றும் கற்களால் ஆன நேர்த்திக்கடன் ஸ்தூபிகள், மற்றும் கல்லால் ஆன சிலைகள் ஆகியவை முக்கியமான கண்டுபிடிப்புகளில் அடங்கும். அந்த அறைகளில், செங்கல் அஸ்திவாரத்தின் மீது வழவழப்பான பூச்சுடன் 'சுண்ணாம்புப் பூச்சு' கொண்டு கட்டப்பட்ட சேதமடையாமல் ஒரு தளமும் மற்றொன்று சேதமடைந்தும் காணப்பட்ட இரண்டு விதமான தளங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
சிறை அறையின் சுவரில் உள்ள ஒரு மாடத்தில், புத்த மத தெய்வங்களின் மூன்று கல் சிலைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. புட்டிகளை மூடி முத்திரையிடப் பயன்படுத்தப்படும் தாமரை மொட்டு போன்ற அழகான சுடுமண் அடைப்பானும், பல சுடுமண் மணிகளும் அவ்விடத்திலிருந்து கண்டறியப் பட்டுள்ளன.
கருங்கற் பாறையால் செய்யப்பட்ட இந்தச் சிலைகள், தாரா தேவி உள்ளிட்ட புத்த மத தெய்வங்களையும், புகழ்பெற்ற 'பூமிஸ்பர்ஷ முத்திரை' (பூமியைத் தொடும் கோலம்) நிலையில் உள்ள புத்தர் பெருமானையும் சித்தரிக்கும் விதமாக இருந்தன.
இந்த அகழ்வாராய்ச்சிக்கு முன்னதாக, அகழ்வாராய்ச்சி இயக்குநரும் மகத் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான சங்கர் சர்மா தலைமையில் ஒரு மாத கால மேற்பரப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
"இந்த அறைகள் அல்லது சிறிய கூடங்கள், நாலந்தா மகாவிகாரம் (பண்டைய நாலந்தா பல்கலைக்கழகம்) உட்பட, இதுவரை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட மற்ற பண்டைய மடாலயங்களில் காணப்படும் கூடங்களைப் போலவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.