சங்கீத கலாநிதி விருதை பெற்ற பாம்பே ஜெயஸ்ரீ.. குவியும் வாழ்த்துக்கள்!

பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீ
Margazhi Sangamam
Margazhi Sangamam

சென்னை மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பெற்றார்.

சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி, நிருத்திய கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா உள்ளிட்ட விருதுகள், கர்னாடக இசை உலகில் பெருமைமிகு விருதாக மதிக்கப்படுகிறது. இந்நிலையில், அகாடமியின் நிர்வாகக் குழு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் பல விருதுகளுக்கு பல கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மியூசிக் அகாடமியின் 97வது ஆண்டு இசைவிழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமைதாங்கி, பாம்பே ஜெயஸ்ரீக்கு ’ சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
நார்வே பாட்டுக்கு அமெரிக்க வயலின், ஆஸ்திரேலிய மிருதங்கம்.. சென்னையில் கலைகட்டும் NRI கச்சேரி!
பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தது வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். அங்கே, கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இந்துஸ்தானி, மேற்கத்திய கிளாசிகல் இசை, நாட்டுப்புற இசை, இவற்றையும் கற்றுக் கொண்டார். ஹிந்தி சினிமா பாடல்களைக் கேட்கவும், பாடவும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ’அவந்தி சேம்பர் ஆர்கெஸ்டிடாவின்’ நிகழ்ச்சியில் சங்க இலக்கியப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

இதைத் தவிர, ஆப்பிரிக்காவின் சூலு கார்னிவல், ஸ்பெயின் நாட்டின் மிகப் பழைமையான தேவாலயம், அர்ஜென்டைனாவில் உள்ளஅருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இசை நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறார். இவர் தற்போது விருது வாங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பலரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com