மக்கள் மனம் வைத்தால் பயனற்று உள்ள குளங்களையும் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். அதேசமயம் நல்ல நிலையில் பயன்பாட்டில் உள்ள ஆற்றையும் சீரழிக்கலாம் என்பதற்கு உதாரணமாக உள்ளது சென்னையின் கூவம் ஆறு. ஆம் டிரிப்ளிகேன் நதி என்று ஸ்டைலாக அழைக்கப்பட்ட கூவம் ஆற்றின் பரிதாப நிலை வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னையின் கருப்பு அடையாளமாக இன்று உள்ளது. ஆனால் உண்மையில் கூவத்தின் சிறப்புகள் ஏராளம்
இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் இதோ.
கூவம் ஆற்றின் மொத்த நீளம் 72 கிலோமீட்டர்
கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரத்தின் கல்லாற்றின் கிளையாறாக துவங்குவதாக கூறுகிறார்கள்.
கூவத்தை சென்னை செல்பவர்கள் எங்கேனும் ஒரு இடத்திலாவது கடந்தே செல்ல வேண்டும்.சென்னையின் பல பகுதிகளைக் கடந்து வரும் ஆறு எழும்பூர் வழியாக வந்து அங்கே இரண்டாகப் பிரிகிறது.
இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே ஒரு தீவாக உள்ளது.அதையே தற்போது நாம் தீவுத்திடல் என்கிறோம் .
தற்போது கழிவுகளுடன் முகம் சுளிக்கும் வகையில் உள்ள கூவம் உண்மையில் மக்கள் மனம் கவர்ந்த ஜீவநதியாக இருந்துள்ளது.
கூவம் என்றால் கிணறு என்ற பொருள் உண்டு.தான் செல்லும் வழியெங்கும் உள்ள குளங்கள் மற்றும் கிணறுகளுக்கு நீர் வளத்தைப் பெருக்கிச்சென்றதால் இப்பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நதியும் பண்டைய காலத்தில் பாலாறு என்றே வழங்கப் பட்டதற்கு சான்றாக வள்ளல் பெருமான் பச்சையப்பர் தினமும் இந்நீரில் நீராடிய பின் கோவிலுக்கு செல்வார் எனும் குறிப்பு உணர்த்துகிறது .
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களும் கூவம் நதியின் அழகில் ஈர்க்கப்பட்டு வங்ககடலுடன் நதி சங்கமிக்கும் இடத்தில் புனித சார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.
அக்காலத்தின் மதராஸ் பட்டண மக்கள் கூவம் நதியில் நீராடிய பிறகு கோவில்களுக்கு சென்றுள்ளனர்.
ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் கூவமாற்றின் வழியே வர்த்தகமே நடத்திருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் ரோம்நகரத்தின் தேசத்தின் அழகு ஜாடிகள் நாணயங்கள் கூவத்தின் கரையோரங்களில் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இப்படி தூய நீர் பாய்ந்து ஓடிய கூவம் நதி தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகள் சோப்பு நுரைகள் போன்றவற்றின் தாக்கத்தால் 1935 ஆம் ஆண்டுக்குப் பின் கூவம் ஆற்றின் தன்மை மாறத் துவங்கியுள்ளது .
கூவத்தின் கழிவுப் பாதிப்புகளால் நன்றாக இயங்கி வந்த சுற்றுலா படகு சேவையும் நிறுத்தப்பட்டது.
பூந்தமல்லி ,அருகம்பாக்கம், அமைந்தகரை வரை சென்னைப் பரப்புகளை சுற்றி வரும் இந்த ஆற்றுடன் சென்னையில் அடையாறு ஆறு , ஓட்டேரி நுல்லா ஆறுகளின் தற்போதைய நிலையும் பரிதாபமாகவே உள்ளது.