ஒரு லட்சம் புத்தர் சிலைகளுடன் சீனாவின் சிற்பக்கலை பொக்கிஷம்!

புத்த பூர்ணிமா (23.05.2024)
லுங்மென் கற்குகை புத்தர் சிலை
லுங்மென் கற்குகை புத்தர் சிலைhttps://ta.wikipedia.org

சீன நாட்டில் ஹொனான் மாநிலம், ஸொயாங் நகரில்  அமைந்த லுங்மென் கற்குகை, கான்சு மாநிலத்தில் உள்ள தங்ஹுவாங் முகெள கற்குகை, சாங்சிதாதொங் யுங்காங் கற்குகை ஆகிய மூன்றும் ‘சீனாவின் கற்கலை களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் மத்திய சீனாவில் அமைந்த ஸொயாங் நகரம் சீன தேச நாகரிகத்தின் தொடக்க இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நகரில் அமைந்த கற்குகை சுமார் 1500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது.

லுங்மென் கற்குகைகளில் மிகப்பெரியது ஷன்சியெ கோயில். இந்தக் கோயில் அமைந்த பகுதிதான் சிற்பக்கலையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கோயில் அமைந்த குகையின் நீளம் 30 மீட்டர் நீளம் 30 மீட்டர் அகலம். வுன்சியெ கோயிலில் காணப்படும் சிலைகள் பார்ப்பதற்கு ஒரு முழுமையான கலைத்தொகுப்பு போல் இருக்கிறது. இங்குள்ள ‘லோசனா’ என்னும் புத்தர் சிலை தலைசிறந்த கலைப் பொருளாகத் திகழ்கிறது. சுமார் 17 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை உயிர்ப்புடன் படைக்கப்பட்டுள்ளது. கீழ் நோக்கி பார்ப்பது போல் அமைந்த இந்த புத்தர் சிலையின் கண் பார்வை தன்னை வழிபடுபவர்களின் கண்களோடு கண் பேசும் விதத்தில் ஒன்றி இருப்பது போல் அமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த சிலையின் சிறப்பு.

லுங்மென் கற்குகையில் காலத்தால் மிகவும் பழமையானது குயாங் குகையாகும். பெய்வெய் வம்ச காலத்தை பிரதிபலிக்கும் மற்றொரு சிறப்புமிக்க கற்குகை இதுவாகும். இக்குகையில் ஏராளமான புத்தர் சிலைகள் உள்ளன. புத்தர் உருவ சிலைக்கு முன் அவற்றை செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகிய விளக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் சிற்பக்கலை ஆராய்வதற்கு போதுமான தகவல்கள் இதில் இடம்பெற்று இருக்கின்றன. சீன கையெழுத்து வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் 20 பொருட்களில் பெரும்பாலானவை லுங்மென் குகைகளில் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிக்கனமாக இருக்க சிறந்த 6 வழிகள்!
லுங்மென் கற்குகை புத்தர் சிலை

பிங்யாங் மத்திய குகை கி.பி. 386ம் ஆண்டு முதல் 512ம் ஆண்டு வரையான காலகட்டத்தைக் கொண்டது. பிங்யாங் குகையில் 11 புத்தர் உருவ சிலைகள் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது சாக்கிய முனிவரின் உருவச்சிலை. இந்த சிலையின் முன்பக்கத்தில் இரண்டு கம்பீரமான கல்லால் ஆன சின்ன சிங்கங்கள் உள்ளன. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தலா ஒரு சீடரின் உருவச்சிலையும் ஒரு கடவுள் உருவச்சிலையும் இருக்கின்றன குகையில் பல கடவுள் சிலைகளும் மதப்பாடம் கேட்கும் சீடரின் உருவ சிலைகளும் உள்ளன.

கிழக்கு மற்றும் மேற்கு மலைகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுடைய கற்பாறைகளிலும் கிட்டத்தட்ட 2500 கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல சிதைந்துபோன நிலையில். சுமார் 1500 கற்குகைகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் ஒரு லட்சம் புத்தர் சிலைகள் இந்த கற்குகையை அலங்கரிக்கின்றன. லுங்மென் கற்குகையில்   ஏராளமான மதம் நுண்கலை ஓவியம் நேர்த்தியான கையெழுத்துக்கள் போன்ற பல வரலாற்று தகவல்கள் உள்ளன. இது மிகப்பெரிய சிற்பக்கலை அருங்காட்சியமாகத் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com