இந்திய பிரதமர்களின் பிறப்பிடமாகவோ அல்லது வசிப்பிடமாகவோ அறியப்படும் தனித்துவமான நகரம், “பிரதமர்களின் நகரம்“ ஆகும் ( City of Prime Ministers ). இதன் வளமான அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி அறிவோமா?
முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட பிரயாக்ராஜ் தான், இந்தியாவில் “பிரதமர்களின் நகரம்“ என்று அழைக்கப்படுகிறது. இந்திய அரசின் முதன்மை நிர்வாகி பிரதமர் தான். இவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 78-ன் படி கடமை ஆற்றுகிறார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவராக இருந்தாலும் கூட பிரதமரிடம் தான் பெரும்பான்மையான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. இந்தியப் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும், நாட்டை நடத்துவதில் முக்கியப் பங்கை வகிக்கிறார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 17 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.16வது மக்களவைக்கு 14வது பிரதமராக, தற்போதய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செயலாற்றி வருகிறார்.
இப்படி, இந்தியாவை வழி நடத்திய 15 பிரதமர்களில் 7 பேருடன், இந்த 'பிரதமர்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிற பிரயாக்ராஜ் வலுவான உறவுகளை பிணைத்துள்ளது. ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்று சிறந்து விளங்குகிறது.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய அரசியலுடனான தனித்துவம் கொண்டுள்ளது. இந்நகரில் பிறந்த/ பூர்வீகமாகக் கொண்ட/ வாழ்ந்து வரும், இந்திய பிரதமர்களைப் கொண்ட பாரம்பரியம் மிக்க நகரமாகும்.
இவர் 1889 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வந்தார். சுதந்திர இந்தியாவின் ஆரம்பக் காலங்களை வடிவமைப்பதில் சிறப்பாக செயல் ஆற்றினார். பிரயாக்ராஜில் உள்ள புல்பூர் தொகுதியிலிருந்து நேரு அவர்கள் பல முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லால்பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பணியாற்றினார். இவர் உள்துறை அமைச்சராகவும், ரயில்வே துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் பிரயாக்ராஜில் இருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தில் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்“ என்ற பிரபல முழக்கத்தை உருவாக்கினார்.
இந்திரா பிரியதர்சினி காந்தி. இவர் இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். ஒரே இந்தியப் பெண் பிரதமர் ஆவார். முதல் பிரதமரான நேருவின் ஒரே மகள். இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி. ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்குப் பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார். எல்லோராலும் சுருக்கமாக இந்திரா காந்தியாக அழைக்கப்பட்டார். இவர் பிரயாக்ராஜுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தார். இவரது திருமணம் பிரயாக்ராஜின் ஆனந்த் பவனில் நடந்தது. இது இவரது மூதாதையர் இல்லமாகும்.
ராஜீவ் காந்தி தனது தாயார் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் 40 வயதில் இளைய இந்திய பிரதமர் ஆனார். இவர் மும்பையில் பிறந்தார். ஆனால், பிரயாக்ராஜுடன் குடும்ப தொடர்புகளை கொண்டிருந்தார். இவரது குடும்ப பூர்வீக உறவுகள் பிரயாக்ராஜில் இருந்தனர்.
குல்சாரிலால் நந்தா இரண்டு முறை இந்தியாவின் தற்காலிக பிரதமராக பணியாற்றினார். பிரயாக்ராஜில் பூர்வீகமாக கொண்டிருந்தார். தொழிலாளர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர் ஆற்றிய பங்கு போற்றத்தக்கதாகும்.
இந்தியாவின் எட்டாவது பிரதமராக விஸ்வநாத் பிரதாப் சிங் பதவி வகித்தார். இவர் பிரயாக்ராஜில் பிறந்தார். இவர் மாணவர் தலைவராக இருந்தார். தனது கல்லூரிக் காலங்களில் மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பாராட்டப்பட்டவர்.
சந்திரசேகர், இந்தியாவின் பிரதமராக சிறிது காலம் பணியாற்றினார். பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக் கழகத்தில் படித்தார். தனது கல்லூரிக் காலங்களில் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். சுயநலவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இவரது உறுதிப்பாடு மற்றும் தைரியத்திற்காக “இளம் துருக்கியர்“ என்று சிறப்பிக்கப்பட்டார்.