வெள்ளத்தை அறிவிக்கும் சங்கு கல் மண்டபம் - பண்டைய அறிவியல் ஆச்சரியம்!

Cone Stone Hall
Cone Stone Hall
Published on

இயற்கைச் சீற்றமான வெள்ளத்தை வரும் முன்னரே தெரிந்து கொள்ளும் அன்றைய கால சங்கு கல் மண்டபம் உணர்த்தும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து உங்களுக்குத் தெரியுமா! இல்லையெனில் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

காலநிலை சீராக இருந்த முந்தைய காலங்களில் எப்போதாவது தான் வெள்ளம் வருதல், சூறாவளி காற்று வீசுதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் உண்டாகும். ஆனால், காலநிலை மாறிப்போன இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி வெள்ளம், சூறாவளி போன்றவை உண்டாகிறது. இதற்கெல்லாம் காரணம் இயற்கையில் மனிதன் நிகழ்த்திய மாற்றங்கள் தான். இன்று மழை, வெள்ளத்தை கணிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், பண்டைய தமிழர்கள் வெள்ளம் வருவதை அறிந்து கொள்ள சங்கு கல் மண்டபத்தை நிறுவினார்கள். அது என்ன சங்கு கல் மண்டபம்? இது எப்படி வெள்ளம் வருவதை முன்னேரே கணிக்கும்? என்று இன்றைய தலைமுறையினர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

தமிழர்களின் அன்றைய அறிவியல் நுட்பம் எவ்வளவு நேர்த்தியாக இருந்தது என்பதற்கு சங்கு கல் மண்டபமும் ஒரு மிகச் சிறந்த சான்றாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்றின் மையத்தில் ஒரு சங்கு கல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது‌. இதன் மூன்று புறமும் சுவர்கள் இன்றி தண்ணீர் சென்று வரும் படியாக காலியாக இருக்கும். ஒருபுறம் மட்டும் சுவரால் அடைக்கட்டிருக்கும்‌. மேல்புறத்தில் சங்கு போன்ற அமைப்பு இருக்கும். இந்த சங்கு கல் மண்டபத்தில் தான் தமிழர்களின் பண்டைய கால அறிவியல் தொழில்நுட்பம் மறைந்துள்ளது.

மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்பட்டால் இதனை முன்னரே மக்களுக்கு அறிவிக்கும் வகையில் இந்த சங்கு கல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது‌. அதாவது, வெள்ள நீர் உயரும் போது, நீரின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு மண்டபத்தின் மேலிருக்கும் சங்கு போன்ற அமைப்பில் அபாய ஒலி கேட்கும். தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே போனால் அபாய ஒலியின் சத்தமும் அதிகமாக இருக்கும். இந்த ஒலியைக் கேட்டு மக்கள் வெள்ளம் வரப் போகிறது என்பதை உணர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்வார்கள். ஒரு கட்டத்தில் ஒலி நின்று விடும். இதற்கு வெள்ள நீர் முழுவதுமாக மண்டபத்தை சூழ்ந்து விட்டது என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
மழை வெள்ளம் பற்றி ஆன்லைனில் புகார் கொடுக்கலாம்; நெல்லை மாவட்டம்!
Cone Stone Hall

அதன் பிறகு சங்குவில் இருந்து மீண்டும் ஒலி கேட்கத் தொடங்கும். இதன்மூலம் வெள்ள நீர் மெல்ல வடியத் தொடங்குகிறது என்பதனை மக்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது இடத்திற்கு இடம் பெயர்வார்கள். இன்றைய காலத் தலைமுறையின் பலருக்கும் சங்கு கல் மண்டபத்தின் அருமை தெரியாது. பல பேரை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய பெருமை சங்கு கல் மண்டபத்தையேச் சேரும்‌.

இன்று பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் யார் உதவியும் இன்றி தன்னாலே வெள்ள முன்னறிவிப்பை வழங்கும் சங்கு கல் மண்டபத்தை உருவாக்கிய நம் முன்னோர்களை நினைத்து நிச்சயமாக நாம் பெருமை கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com