பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் ஒளிந்திருக்கும் 6 ஆபத்துகள் தெரியுமா?

பேப்பர் கப் காபி
பேப்பர் கப் காபி
Published on

‘அண்ணே, எனக்கு யூஸ் அன் த்ரோ கப்ல ஒரு டீ’ என்று கேட்கும் கலாசாரம் இப்போது நகரம் மட்டுமல்ல, கிராமங்களிலும் பெருகிவிட்டது. கண்ணாடி கிளாசில் குடித்த காலம் போக, இப்பொழுது எல்லாம் பேப்பர் கப்பில்தான் அதிகம் டீ குடிக்கிறார்கள். கடைக்காரர்களுக்கு கிளாஸ் கழுவ சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பேப்பர் கப்பில் டீ குடித்தால் நம் உடலுக்கு எவ்வளவு தீங்கு என்பது உங்களுக்கு தெரியுமா?

பேப்பர் கப்பில் சூடான பொருட்களை சாப்பிடும்பொழுது அதில் இருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் நம் உயிருக்கே உலை வைக்கும் என்பதை அறிந்தால் பேப்பர் கப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டீர்கள். பேப்பர் கப் டீ சாப்பிட்டால் அல்லது காபி சாப்பிட்டால் ஏற்படும் 6 கொடூரமான விளைவுகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பேப்பர் கப்களில் ஊற்றப்படும் குளிர்பானங்கள், சூடான பானங்கள் போன்றவை ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, இந்த கப்களில் ‘ஹைட்ரோபோபிக்’ எனப்படும் மெல்லிய அடுக்கு பூசப்படுகிறது. இது, ‘பாலித்தீன்’ எனப்படும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.

2. இந்த கப்களில் 85 முதல் 90 டிகிரி சூடான டீ, காபி உள்ளிட்ட சூடான பானங்களை ஊற்றினால், சிறிது நேரத்தில் இந்த பிளாஸ்டிக் அடுக்கு உருகி, பானங்களில் கலக்கிறது.

3. உதாரணத்துக்கு ஒரு கப்பில் 15 நிமிடங்கள் வரை சூடான பானங்களை வைத்திருந்தால், 25,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் அதில் கலக்கின்றன. இவை கண்களுக்குத் தெரியாது.

4. ஒரு நபர் தினமும் 3 முறை இந்த கப்களில் டீ, காபியை குடிக்கிறார் என்றால், 75 ஆயிரம் பிஸாஸ்டிக் நுண் துகள்கள் அவருடைய வயிற்றுக்குள் செல்கிறது.

5. இதன் மூலம், பலாடியம், குரோமியம், கேட்மியம் போன்ற கடின உலோக நுண்துகள்கள் ஜீரண உறுப்புகளுக்குச் சென்று, பிற்காலத்தில் மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
ஊறுகாயின் வகைகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்!
பேப்பர் கப் காபி

6. ஆகவே, ஆபத்தான பேப்பர் கப்களுக்கு மாற்றாக, உடல் நலத்துக்கு ஆபத்து விளைவிக்காத, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கப்களை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

கண்ணாடி கிளாசிலும் எவர்சில்வர் வட்டா செட்டிலும் காபி குடித்த காலத்தில் நாம் இவ்வளவு புற்று நோய்களையும் வயிற்று உபாதைகளையும் கண்டதில்லை. ஆனால், தற்பொழுது மேற்கண்ட உடல் பிரச்னைகளால் ஏற்படும் இறப்புகளே அதிகம் உள்ளன. இனி, டீ கடைகளுக்குச் சென்றால் கூச்சப்படாமல் அண்ணே கிளாஸில் டீ கொடுங்கள், வட்டா செட்டில் காபி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். நம் உயிருக்கு நாமே உலை வைக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com