லாமினேட் செய்யப்பட்ட மரத்தரை தளத்தின் 7 பயன்கள் தெரியுமா?

Laminated wooden flooring
Laminated wooden flooringhttps://www.checkatrade.com

புது வீடு கட்டும்போது தரைகளுக்கு பொருத்தமான டைல்ஸ் அமைப்பது வழக்கம். தற்போது வீடுகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு லேமினேட் செய்யப்பட்ட வுட்டன் ஃப்ளோரிங் (wooden flooring) அமைக்கிறார்கள். அது பார்ப்பதற்கு நவீனமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. அவற்றின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அழகிய டிசைன்களில் அதிக அடர்த்தி கொண்ட ஃபைபர் போர்டு லேமினேட் வுட்டன் ஃப்ளோரிங் நான்கு அடுக்குகளில் கிடைக்கிறது. அலங்கார காகிதம் அதிக அடர்த்தி கொண்ட பைபர் போர்டு ஆகியவற்றுடன் அழுத்தமாக பிணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்கள் கட்டமைப்புகள் மற்றும் பாணிகளில் வருகிறது. பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் நவீனமாகவும் இருப்பதுடன் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை உடையது. இது தற்போது வாடிக்கையாளர் இடையே பிரபலமாகி வருகிறது.

1. நீடித்தத் தன்மை: லேமினேட் வுட்டன் ஃப்ளோரிங்கை சரியாக நிறுவி பராமரிப்பதன் மூலம் தேய்மானம் அழுத்தம் மற்றும் சேதத்தை தாங்கும் வலிமை உடையது. மற்ற தரையை ஒப்பிடும்போது பல ஆண்டுகள் வரை நீடிக்கும் தன்மை உடையது. தரைதளம் மென்மையாகவும் கடினமான அமைப்புடனும் இருக்கிறது. நீடித்து உழைக்கக் கூடியது.

2. குறைந்த செலவு: வீடுகளுக்கு ஒரு அற்புதமான முதலீடாக இது இருக்கிறது. டைல்ஸ் பதிக்கப்பட்ட மற்ற தரைகளை விட நீண்ட காலம் நீடிக்கும். இது உறுதியானது மற்றும் கடினமானது. இதில் சேதாரம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நீண்ட காலத்திற்கு பராமரிப்பு செலவையும் குறைக்கிறது. எனவே குறைந்த செலவிலேயே இதை அமைக்க முடியும். இவை பட்ஜெட் பிரண்ட்லியாக இருக்கும்.

3. சுத்தம் செய்வது எளிது: தூசு, பூச்சிகள் குப்பை போன்றவற்றை மிக எளிதாக அகற்றலாம். பொதுவாக டைல்ஸ்களில் இடையே உள்ள கோடுகளில் தூசு தும்புகள் சென்று ஒட்டிக்கொள்ளும். ஆனால், இந்த மரத்தரையில் கறை ஏற்பட்டால், தூசு ஒட்டிக் கொண்டிருந்தாலும் அதை சுத்தம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. வெறும் துடைப்பத்தின் மூலம் சுத்தம் செய்தாலே இதில் உள்ள குப்பைகள் வந்துவிடும்.

4. புதுப்பாணி தோற்றம்: டைல்ஸ்களில் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த மரத்தரைகள் பல வடிவமைப்புகளில் பல வண்ணங்களில் கிடைக்கும். எனவே, மனதிற்கு பிடித்த வகையில் தேர்ந்தெடுத்து பொருத்தலாம். இது வீட்டிற்கு அழகு சேர்க்கும். இயற்கையான மற்றும் புதுப் பாணியான தோற்றத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?
Laminated wooden flooring

5. சத்தத்தை பிரதிபலிப்பதில்லை: நடன அரங்குகள், இசை ஸ்டுடியோக்கள் மற்றும் வணிக அலுவலகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இந்த லேமினேட் செய்யப்பட்ட மரத்தரைகளை அமைக்கிறார்கள். ஏனென்றால், இது சத்தத்தை பிரதிபலிப்பதில்லை. தொந்தரவு இல்லாமல் வேலை செய்யலாம். ஒரு இசைக் கலைஞர், நடனக் கலைஞர், இசை ஆர்வலராக இருந்தால் இந்த வகையான மரத்தளம் சிறந்த தேர்வாக இருக்கும். அமைதியாக வேலையை கவனிக்கலாம்.

6. இன்ஸ்டால் செய்ய எளிதானது: மற்ற தரைகளுடன் ஒப்பிடும்போது லேமினேட் தரைத்தளத்தை நிறுவ எளிதானது. மற்றவற்றில் ஆணி அடித்து அதன் பின்புதான் அமைக்கப்படுகிறது. இதை எளிதாக புதுப்பிக்க முடியும். பின்னர் அதில் மாற்றியும் அமைக்கலாம். சரி செய்யவும் முடியும்.

7. மற்ற தரைகளை விட சிறந்தது: இது வலுவானது. மலிவு விலை மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது. ஸ்டைலான நவநாகரிக மற்றும் கம்பீரமான தோற்றம் தருவது. நல்ல ரீசேல் வேல்யூ உள்ளது. நீண்ட கால முதலீடாக செயல்படுகிறது. லேமினேட் தரைத்தளத்தை அமைத்த வீடுகள் விரைவாக விற்பனை ஆகின்றன. தரையில் ஏற்படும் ஈரப்பதத்தின் காரணமாக தரைப்பகுதி சேதமாவதைத் தடுக்க உதவும். சமையலறைகள் மற்றும் குளியல் அறைகளுக்கு மிகவும் ஏற்றது. இதில் நிலையான பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com