மதுரையின் விளக்குத்தூண் பற்றி தெரியுமா?

Madurai Vilakku Thun
Madurai Vilakku Thunhttps://www.muthukamalam.com

துரை மாநகருக்கு பலமுறை சென்றிருப்போம். அங்குள்ள விளக்குத் தூண் பகுதியையும் கடந்திருப்போம். அந்த விளக்குத்தூண் பகுதியில் ஏராளமான கடைகளையும் பார்த்து, ஏராளமான பொருட்களையும் வாங்கி வந்திருப்போம். மதுரையின் முக்கிய பகுதியான துணிக்கடைகள் எல்லாம் இருக்கக்கூடிய விளக்குத்தூண் பகுதியில் கூட்ட நெரிசலைக் கொண்ட பத்து தூண் சந்து ஒன்று உள்ளது. இந்த சந்துப் பகுதிக்கு உள்ளே சென்றால் அண்ணாந்து பார்க்கக்கூடிய அளவுக்கு மிக உயர்ந்து காட்சியளிக்கும் கருங்கற்கள் கொண்டே கட்டப்பட்ட பிரம்மாண்டமான பத்து தூண்கள் இருக்கின்றன.

பொதுவாக, தூண்களை அரண்மனை அல்லது வீடுகளில்தான் பார்த்திருப்போம். ஆனால், இங்கு இருக்கும் தூண்கள் மட்டும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அந்த விளக்குத் தூண் இங்கு எப்படி வந்தது என்று ஒரு முறையாவது நினைத்துப் பார்த்திருப்போமா!

மதுரை நகரின் பத்து தூண் தெரு அருகில் மாசி வீதியும் தெற்கு மாசி வீதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது இந்த விளக்குத் தூண். வீதியின் நடுவே அழகிய வேலைப்பாடுகள் மிக்க இரும்பு தூணில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதுரை நகரை விரிவாக்கம் செய்த மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்ன் நினைவாக எழுப்பப்பட்டதுதான் இந்தத் தூண்.

இதையும் படியுங்கள்:
உணவில் சேர்க்க வேண்டிய 9 சிறந்த அல்கலைன் உணவுகள்!
Madurai Vilakku Thun

பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்ன் என்பவர், ‘மதுரை நகரத்தை விரிவாக்கம் செய்யத் தடையாக இருக்கும் கோட்டைகளை இடித்து, அகழிகளை மூடும் நபர்களுக்கு அவ்விடம் உரிமையாகும்’ என அறிவித்தார். இதனால் வீட்டுமனை, நிலம் இல்லாதவர்கள் மதுரையை சுற்றிலும் இருந்த கோட்டைகளை இடித்து அகழிகளை மூடினர். ஜோகன் பிளாக்பர்ன் செயலைப் பாராட்டி மதுரை நகரின் மையப் பகுதியில் தற்போதைய காமராஜர் சாலையில் இருக்கும் இடத்தில் எஃகு உலோகத்தினாலான விளக்குத்தூணை நிறுவினர்.

அக்காலத்தில் இத்தெருவில் உள்ள பத்து தூண்களில் இரவு நேரங்களில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.  வட்டமான கிரானைட் கற்களை அடுக்கி இந்தத் தூண்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மீது சுண்ணாம்பு பூச்சு மற்றும் செங்கற்கள் கட்டப்பட்டு அரண்மனையில் உள்ள தூண்களுக்கு ஒப்பானவையாக பத்து தூண்களும் ஒரே உயரம் கொண்டவையாக சிற்பங்கள் ஏதும் இல்லாமல் கட்டப்பட்டன. ஒவ்வொரு தூணும் 12 மீட்டர் உயரமும் 12 மீட்டர் சுற்றளவும் கொண்டது. இந்தப் பத்து தூண்களில் ஒன்றில் சிவலிங்க சிற்பம் பதிக்கப்பட்டுள்ளது. தூணின் உச்சியில்  விளக்கேற்றவும் அடி பாகத்தில் ஜோஹன் பிளாக்பர்ன் பெருமை பேசும் கல்வெட்டும் பதிக்கப்பட்டது. மதுரை சென்றால் அவசியம் இந்த விளக்கத்தூணை மறக்காமல் பார்த்து விட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com