மாவீரன் நெப்போலியன் சட்டைப் பையில் இருந்த கடிதங்கள் பற்றித் தெரியுமா?

Do you know about the letters in Napoleon's pocket?
Do you know about the letters in Napoleon's pocket?https://tamil.boldsky.com

நெப்போலியன் மாவீரன் என்று போற்றப்பட்டதற்குக் காரணம் ஒன்று உண்டு. எந்த நிலையிலும் அவர் மனங்கலங்கவே மாட்டார். அரண்மனையில் இருந்தாலும் சரி, போர்க்களத்தில் இருந்தாலும் சரி தன்னம்பிக்கை இழக்காத மனிதராகவே அவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தனது வாழ்க்கையின் பல நாட்கள் போர்க்களத்திலேயே இருக்க நேர்ந்தது. இருப்பினும் அது குறித்து அவர் கவலைப்பட்டதே இல்லை. எப்போதும் சுறுசுறுப்புடனும், சோர்வடையா நெஞ்சுடனும், பிரச்னைகளைச் சந்திக்கும் மன உறுதியுடனும் இருந்து வருவார்.

அவர் எக்காரணத்தைக் கொண்டும் போர் நடைபெறும்போது போரில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புக்களை வைத்துக்கொள்ளவே மாட்டார். அவரிடம் போர் பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியல் எதுவும் எப்போதும் இருந்ததே இல்லை. ஆனாலும், அவர் சட்டைப் பையில் அவரை விட்டு நீங்காமல் இரண்டு மூன்று கடிதங்கள் மட்டும் இருக்கும். அந்தக் கடிதங்களை அவ்வப்போது அவர் எடுப்பார். படிப்பார். பின் மடித்துச் சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்ளுவார்.

இதையும் படியுங்கள்:
தமிழ் சம்மட்டி; ஆங்கில ஸ்மித் - என்ன தொடர்பு?
Do you know about the letters in Napoleon's pocket?

உடனே உற்சாகம் அவரிடம் அதிகரிக்கும். தனது படைகளுக்குச் சரியான உத்தரவுகளை இடுவார். அவரை ரகசியமாகக் கவனிக்க நேரிடும், அவருடைய படைப்பிரிவினர்கூட இதைக் கண்டு ஆச்சரியமடைவதுண்டு. என்ன கடிதங்கள் அவை என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளுவதுண்டு.

ஒருவேளை ரகசியச் செய்தியோ, அதன்படிதான் இவர் நடக்கின்றாரோ என்று சந்தேகப்படுவதும் உண்டு. உண்மையிலேயே அவை ரகசியச் செய்திகள் இல்லை.

அந்தக் கடிதங்கள் மாவீரன் நெப்போலியனின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அவருடைய காதலி ஜோஸஃபைன் எழுதிய காதல் கடிதங்கள்தான்!

- நிதிஷ்குமார் யாழி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com