ஒரு நாட்டினை ஆள்வதற்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த முறையாக தேர்தல் கருதப்படுகிறது. அந்த வகையில்ஆரம்ப கால மன்னர் ஆட்சி முதல், இந்தக் கால மக்கள் ஆட்சி வரை உலகம் முழுவதும் நடைபெற்ற தேர்தல்கள் பல காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. நாடுகளுக்கிடையில் இருக்கும் தேர்தல் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பார்ப்போம்.
உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் வாக்களிக்கும் நிலையில் 100 மில்லியன் மக்கள் உள்ளனர்.
பொதுவாக, அமெரிக்காவில் தேர்தல்கள் நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமைகளில்தான் நடைபெறும். ஏனெனில், அமெரிக்காவில் விவசாயிகள் அதிகமாக இருந்தபோது இது நடைமுறையில் இருந்தது. ஏனென்றால், அவர்களின் சாகுபடி மற்றும் அறுவடை நவம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும். இதனால் விவசாயிகள் வேலையில் இருந்து விலகி வாக்களிக்க அதிக நேரம் கிடைக்கும் என்பதற்காகவாகும்.
அமெரிக்காவில் முதன் முறையாக அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய வெள்ளையர்களில் சொத்துக்கள் உடைய ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற சட்டம் இருந்தது. அதுவே 1971ம் ஆண்டு வரை வாக்களிக்கும் வயது 21 ஆகவே இருந்தது. அதன் பிறகுதான் வாக்களிக்க 18 வயதை தீர்மானித்தார்கள். இதன் பிறகு பல நாடுகளில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கலாம் என்ற சட்டம் வந்தது.
மால்டா மற்றும் ஆஸ்திரியாவில் 16 வயதை அடைந்தவர்கள் கூட வாக்களிக்க முடியும். உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க ஜெர்மானியர்கள் 16 வயதை அனுமதிக்கிறார்கள்.பிரேசில், நிகரகுவா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, சூடான் போன்ற நாடுகளில் 16 வயதிலேயே வாக்களிக்கலாம்.
இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலும் பொது தேர்தல்கள் வியாழக்கிழமைதான் நடத்தப்படும். ஒரே ஒரு முறை மட்டும் 1991ல் அக்டோபர் மாதம் வேறு கிழமையில் நடந்தது. ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் கம்யூனிஸ்ட் என்றால் அவர்களுக்கு என்று தனியாக சிவப்பு நிற கலரில் வாக்கு சீட்டு இருக்குமாம். இங்கிலாந்து நாட்டில் உங்கள் வீட்டின் செல்ல நாய்க்குட்டியுடன் கூட சென்று வாக்களிக்கலாம். ஆனால், அதை வெளியே விட்டு விட்டுச் சென்று வாக்களிக்க வேண்டும். அதைப் பார்த்துக்கொள்ள காவலர்கள் இருப்பார்கள்.
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கிரீஸ் உட்பட பல நாடுகளில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் குறைவாக வேலை செய்யும்போது தேர்தல் நடத்தப்படுகிறது. எல்லா மக்களும் தேர்தலில் கலந்து கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் சனிக்கிழமை அன்று மட்டுமே தேர்தல் நடக்கும். இந்நாடுகளில் ஓட்டு போடவில்லை என்றால் அபராதம் உண்டு என்பதால் இங்கு 91 சதவீதம் வாக்களிக்கப்படுகிறது.
உலகில் 22 நாடுகளில் தேர்தல் அன்று ஓட்டு போடவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில நாடுகள் பிரேசில், மெக்சிகோ, பெரு, சிங்கப்பூர், தாய்லாந்து.
ஜெர்மன் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடைபெறும். பொதுவாக, அங்கு ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.
கனடா நாட்டில் வழக்கமாக திங்கட்கிழமை மட்டுமே தேர்தல் நடக்கின்றது. நெதர்லாந்து போன்ற நாடுகளில் புதன்கிழமைகளில் வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைந்துள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு புதன்கிழமைகளில் அரை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
எஸ்டேனியா நாட்டில் அந்நாட்டு மக்கள் உலகில் எங்கே இருந்தாலும் சரி அவர்கள் அந்நாட்டின் தேர்தல் நேரத்தில் ஆன்லைனில் வாக்களிக்கலாம். அமெரிக்காவில் வெளி நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இ-மெயில் முலம் வாக்களிக்கலாம். சுவிட்சர்லாந்து நாட்டில் 80 சதவீத வாக்குகள் இ-மெயில் மூலமாகவே பதிவாகின்றன.
ஸ்பெயின் நாட்டில் பார்வையற்றோர் பிறர் உதவியின்றி தேர்தல் சமயத்தில் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு பிரெய்லி வாக்கு சீட்டுகளை அந்நாட்டு அரசு வழங்குகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆஸ்திரேலிய குடிமக்களும் (மனநிலை சரியில்லாதவர்கள் அல்லது கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவிர) வாக்களிக்க பதிவுசெய்து, தேர்தல் நாளில் அவர்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஆஜராக வேண்டும். இந்த உத்தரவைக் கடைப்பிடிக்காத ஆஸ்திரேலியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது வாக்களிக்க இயலாதவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. தேர்தல் நாளில் வாக்களிக்கத் தவறினால் அங்கு 20 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும்.