அமெரிக்க பாலைவனத்தில் நடைபெறும் எரியும் மனிதன் திருவிழா தெரியுமா?

எரியும் மனிதன் திருவிழா
எரியும் மனிதன் திருவிழாhttps://historified.in
Published on

வ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செப்டம்பர் முதல் திங்கட்கிழமை வரை  9 நாட்கள், ‘எரியும் மனிதன்’ (Burning Man) எனப்படும் திருவிழா ஐக்கிய அமெரிக்காவின் நெவாடாவில் கரும்பாறை பாலைவனத்தில் இதற்காக உருவாக்கப்படும் தற்காலிக நகரத்தில் கொண்டாடப்படுகின்றது. இது அமெரிக்க தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது. உலகின் டாப் 10 திருவிழாக்களில் இதுவும் ஒன்று.

சுமார் 80,000க்கும் மேற்பட்ட கலாசார மற்றும் இசை கலைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு மையக் கருத்தின் அடிப்படையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்களது திறமைகளக் காட்டி மகிழ்கின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த இங்கே வருகை தருகிறார்கள். இவ்விழாவின்போது இடையில் வரும் சனிக்கிழமை 8 அடி உயர மனித பொம்மையை எரிக்கிறார்கள்.

எரியும் மனிதன் திருவிழா
எரியும் மனிதன் திருவிழாhttps://historified.in

நிகழ்வின் உச்சக்கட்டம், ‘மனிதன்‘ என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மர உருவ பொம்மையை எரிப்பதாகும். இந்த சடங்கு எரிப்பு பொதுவாக சனிக்கிழமை இரவில் நடைபெறுகிறது. மாற்றத்தை விட்டுவிடுவதற்கும் தழுவுவதற்கும் ஒரு அடையாளச் செயலாக இந்த மனிதன் எரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பர்னிங் மேன் திருவிழா 1986ல் தொடங்கப்பட்டது, லாரி ஹார்வி மற்றும் ஜெர்ரி ஜேம்ஸ் என்ற இரு  சான்பிரான்சிஸ்கோ கலைச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சான் பிரான்சிஸ்கோவின் பேக்கர் கடற்கரையில் ஒரு மனிதனின் எட்டு அடி (இரண்டு மீட்டர்) உயரமான மர உருவ பொம்மையை எரித்தனர். இந்த நிகழ்வை இருபது பேர் பார்த்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் பல பேர் பார்க்கும் திருவிழாவானது இது. சான்பிரான்சிஸ்கோ உருவ பொம்மையை எரிப்பதால் பிரச்னை ஏற்பட அந்தத் திருவிழா நெவாடா பாலைவன பகுதிக்கு மாறியது.

எரியும் மனிதன் திருவிழா
எரியும் மனிதன் திருவிழாhttps://historified.in

இந்த எரியும் மனிதன் திருவிழாவிற்காக ஒரு வாரத்திற்கு, பிளாக் ராக் பாலைவனம் பிளாக் ராக் சிட்டியாக மாறுகிறது, இது 70,000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட திருவிழா. ஒவ்வொரு பர்னிங்மேன் திருவிழாவிற்கும் தனித்துவமான கருத்து ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர். அதை திருவிழாவிற்கு முன்னர் அறிவிக்கப்பட்டு அது அந்தத் திருவிழாவின் அனைத்து அம்சங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கிறது.

இதையும் படியுங்கள்:
சாதனைக் குழந்தைகளை உருவாக்குவது யார் கையில் இருக்கு?
எரியும் மனிதன் திருவிழா

இது மற்ற பண்டிகைகள் போல் இல்லை என்பதால், அந்தத் திருவிழாவில் குறைந்த அளவே உணவகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்பதால் பார்வையாளர்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். இவ்விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் மக்கள் பர்னிங் மேனுக்கான அடிப்படை டிக்கெட் விலை $575 என்றாலும், தங்குமிடம், பயணம், உணவு மற்றும் உடைகள் ஆகியவற்றைக் கணக்கிடும்போது ஒட்டுமொத்த செலவு $1,500 ஆக உயரும்.

வடமேற்கு நெவாடாவில் உள்ள பிளாக் ராக் பாலைவனத்தின் மையத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக  நகரமான பிளாக் ராக் சிட்டியில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. இந்த இடம் வேண்டுமென்றே தொலைவில் உள்ளது, ரெனோவிற்கு வடக்கே சுமார் 141 மைல் தொலைவில் உள்ளது. இந்தத் திருவிழாவின்போது, ​​பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் இப்பகுதியை, ‘ப்ளேயா’ என்று குறிப்பிடுகின்றனர், இருப்பினும் கடந்த ஆண்டு, இது ‘ஈரமான பிளேயா’ என்று நகைச்சுவையாக மறுபெயரிடப்பட்டது. காரணம் அங்கு பெய்த கனமழை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com