உலகின் மிகவும் பழைமை வாய்ந்த ஐந்து ஓவியக் கலைகள் தெரியுமா?

சித்தன்னவாசல் குகை ஓவியம்
சித்தன்னவாசல் குகை ஓவியம்https://www.tamilhistory.co.in
Published on

மொழிகள் பிறக்காமல் இருந்த காலத்தில், மக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்காக செய்கைக்கு அடுத்து ஓவியங்களைத்தான் பயன்படுத்தினார்கள். ஒவியங்கள் முதலில், ‘எச்சரிக்கை, பயம், வழிக் குறிப்பு’ போன்றவற்றிற்கு சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர்தான் ஒரு நிகழ்வுகளை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்கள். மனிதர்கள் இறந்துபோனாலும் அவர்கள் வடிவில் உயிருள்ள ஒரு ஓவியம் இருந்ததுதான், மக்கள் ஓவியத்தில் ஆர்வம்கொள்ள ஒரு காரணமாக அமைந்தது. அந்த வகையில் உலகிலேயே மிகவும் பழைமையான ஓவியங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

சித்தன்னவாசல் குகை ஓவியம்: இந்த ஓவியம் இந்தியர்களால் 600 முதல் 700 AD காலங்களில் தோன்றிய கலை. இந்த ஓவியம் மனிதர்கள் மற்றும் விலங்குகள் அடிப்படையில் வரைந்த ஓவியம். உலகிலேயே மிகவும் பழைமையான இந்த இந்திய ஓவியம் சுவர்களிலும் மேற்சுவர்களிலும் சுண்ணாம்பால் வரையப்படும் ஒன்று. சுண்ணாம்பு ஓவியத்தின் மேல் இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி வரைவார்கள். இது ஒரு மத சார்பற்ற ஒவியம். இயற்கை மற்றும் தாவரங்கள் அடிப்படையில் வரையும் ஓவியம். இது சித்தன்னவாசல் குகையில் அதிகம் காணப்பட்டது.

ஹைராகோன்போலிஸ் கல்லறையில் வரையப்பட்ட ஓவியம்: இது எஜிப்தியர்களால் 3500 BCE காலத்தில் தோன்றியது. இவற்றை விலங்குகள், மனிதர்கள், போர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வரைந்தார்கள். இது சுண்ணாம்பு மற்றும் பெயின்ட் பயன்படுத்தி வரைந்த ஓவியம். ஹைராகோன்போலிஸ் நாகரிகத்தின்போது இறந்த மனிதர்களை மகிழ்வோடு அனுப்பி வைக்க அவர்கள் கல்லறைகளில் நெகிழ்ச்சி சம்பவங்களை வரைந்தார்கள்.

ஹைராகோன்போலிஸ் ஓவியம்
ஹைராகோன்போலிஸ் ஓவியம்https://sumerianshakespeare.com

மன்னர் நார்மர் காலத்தில் ஹைராகோன் என்பது தலைநகரமாக விளங்கியது. இந்த ஓவியங்களின் பொருள்களை வரலாற்று ஆராய்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால், இன்னும் சில ஓவியத்தின் பொருளை ‘இதுதான்’ என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை. சில ஓவியங்கள் போர், உயிர் தியாகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வரைந்திருந்தனர். மேலும், இந்தக் கல்லறை பிரமிடை விட 700 வருடங்கள் பழைமையானதும் கூட.

லிண்டிஸ்ஃபார்ன் சுவிசேஷங்கள்: இது பிரிட்டிஷ் ராஜ்யத்தால் 700 AD காலத்தில் தோன்றியது. இந்த வகையான ஓவியங்களை முதலில் பைபில் புத்தகத்தில்தான் வரைந்தனர். இந்த ஓவியத்தின் இடையே செயின்ட் ஜெரோமெஹிஸ், மெடிட்டேர்ரியன், ஆங்லோ சேக்ஷான்  மற்றும் செல்டிக் போன்ற மொழிகளின் வார்த்தைகளும் இடம் பெற்றிருக்கும்.

தக்கமாட்சுசுகா: இது களிமண்ணால் ஜப்பானியர்கள் 600 முதல் 700 காலங்களில் கண்டுப்பிடித்த ஒன்று. இதுவும் கல்லறையில் வரையப்பட்ட ஒன்று. இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் இது 7ம் நூற்றாண்டில் அல்லது 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். மேலும், 1960ம் ஆண்டுதான் ஒரு விவசாயி இந்த ஓவியம் இருந்ததையே எதேச்சையாகக் கண்டுபிடித்தார்.

சலூஸ்ட் வீட்டுச் சுவர் ஓவியம்: இது ரோமானியர்களால் 400 முதல் 100 BCEகளில் கண்டுப்பிடித்த ஒன்று. ரோமானியர்கள் ஓவியங்களை விட கட்டடக் கலைகளிலேயே சிறந்து விளங்கினார்கள். ஆகையால்தான் தங்களது கட்டுமானங்களை அழகுபடுத்த ஓவியங்களைக் கண்டுபிடித்தார்கள். ரோமன் தலைநகரமான பொம்பையில்தான் இந்த கலை அதிகம் வரையப்பட்டது. இது சுவரின் ஒரு மார்பில் வடிவம் போல் காணப்படும். மேலும், சுவரை அழகுபடுத்தும் ஒரு ஓவியமாகவும் இருந்தது. பிற்காலத்தில் இது பல போர்களால் சேதம் அடைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com