புதுச்சேரியின் சண்டே மார்க்கெட் வரலாறு தெரியுமா?

புதுச்சேரி சண்டே மார்க்கெட்
புதுச்சேரி சண்டே மார்க்கெட்

பாண்டிச்சேரி, அதாவது தற்போது புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குட்டி மாநிலம். இந்தப் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், மணக்குள விநாயகர், அழகான கடற்கரை, என நிறைய வரும். இவற்றோடு சேர்த்து எல்லோரின் மனதிலும் நிற்பது சண்டே மார்க்கெட்.

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைத்தெருக்களில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால், புதுச்சேரியில் இருக்கும் சண்டே மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் குவிந்து கிடக்கும். கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் என சுற்றி இருக்கும் மாவட்ட மக்கள் இந்த சண்டே மார்க்கெட்டுக்கு வாரம் தோறும் படையெடுப்பார்கள். அப்படி என்னதான் இந்த மார்க்கெட்டில் இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். என்னதான் இல்லை என்ற பதிலை சொன்னால் அது மிகை இல்லை. புதுச்சேரி சண்டே மார்க்கெட் பற்றி இப்பதிவில் சுருக்கமாகப் பார்ப்போம்.

புதுச்சேரி சண்டே மார்க்கெட்
புதுச்சேரி சண்டே மார்க்கெட்

புதுச்சேரிக்கு இருக்கும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது இந்த சண்டே மார்க்கெட். இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சந்தை நடைபெறும். இந்த மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருப்பதுதான்.

புதுச்சேரி மாநிலத்தின் பிரதான பகுதியான நேரு வீதி, காந்தி வீதியில் இந்த சந்தை செயல்படுகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சந்தைக்கு ஆந்திரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் நிரந்தர வாடிக்கையாளர்களே. பார்ப்பதற்கு சென்னை, ரங்கநாதன் தெரு போலவே காட்சி தரும் இந்த சந்தையில் வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என எல்லாம் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும்  வாகன உதிரி பாகங்களும்  இங்கு மலிவாக வாங்கிச் செல்ல முடியும். பயன்படுத்திய பொருட்களை பாதி விலைக்கு விற்பனை செய்ய வருவோரும் இங்கு உண்டு என்பதால்  அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை கூட குறைவான விலையில் வாங்கும் இடமாக இது இருக்கிறது.

புதுச்சேரி சண்டே மார்க்கெட்
புதுச்சேரி சண்டே மார்க்கெட்

நடந்துகொண்டே இருக்கலாம் எனும் அளவுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவையும் தாண்டி இந்த சந்தை செயல்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கும் இந்த சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஒவ்வொரு வாரமும் விற்பனை நடப்பதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா கோலம் போல காட்சி தரும் இந்த சந்தையில் தீபாவளி, பொங்கல் நேரத்தில் சிறப்பு விற்பனை ஒரு வாரம் வரை நடக்குமாம்.

இதையும் படியுங்கள்:
பம்பளிமாஸ் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?
புதுச்சேரி சண்டே மார்க்கெட்

புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் சண்டே மார்க்கெட்டையும் சுற்றிப் பார்க்க தவறுவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு இடமாக இருக்கிறது புதுச்சேரி சண்டே மார்க்கெட். மழைக்காலம், வெயில் காலம் என தட்ப வெப்ப சூழலையும் தாண்டி மக்கள் பேராதரவோடு செயல்படுகிறது இந்த சந்தை. நீங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி சண்டே மார்க்கெட்டை ஒரு ரவுண்ட் வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com