அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் தெரியுமா?

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (26.04.2024)
intellectual property rights
intellectual property rightshttps://lagatar24.com

ல்வேறு துறைகளில் புதுமையான கருத்துக்கள் மற்றும் படைப்பாற்றலை புகுத்துவதையும், அவற்றின் உரிமைகள், முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உலக அறிவுசார் சொத்து தினம் ஏப்ரல் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பாக செயல்படுகிறது.

உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தின் கோட்பாடுகள்:

1. ஐடியாக்களை பாதுகாத்தல்: தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்திற்கு புதிய ஆப் அல்லது அதிவேக கணினி ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைகள் இருந்தால் அவற்றை மற்றவர்கள் திருடாமல் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதை இந்த கோட்பாடு வலியுறுத்துகிறது.

2. புதிய விஷயங்களை ஊக்குவித்தல்: தமது யோசனைகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்தால் இன்னும் நிறைய விஷயங்களை சிந்திக்கவும் செயல்படுத்தவும் மக்கள் முன் வருவார்கள். இந்த தினம் மக்களை புதிய கண்டுபிடிப்புகள், பாடல்கள், கதைகள் மற்றும் பலவற்றை கண்டுபிடிப்பதற்கு ஊக்குவிக்கிறது.

3. பொருளாதார உதவி: புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்படும்போது அது கண்டுபிடித்தவர்களுக்கும் பயனாளர்களுக்கும் நன்மைகள் செய்யும். தொழிற்சாலைகளில் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்கு உதவியாக இருக்கும். பொருளாதாரமும் உயரும்.

4. கலாசார பாதுகாப்பு: உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலாசார பாரம்பரிய பாடல்கள். நடனங்கள். சமையல் குறிப்புகள் போன்றவற்றை அறிவுசார் சொத்து உரிமைகள் பாதுகாக்கின்றன. அவை அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாக்கப்படுகின்றன.

5. உலக நாடுகளை ஒன்றிணைத்தல்: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் கருத்துக்களும் யோசனைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து பணிபுரிய வாய்ப்பு தருகிறது. இது பல்வேறு புதிய சிறந்த விஷயங்களைச் செய்ய தூண்டுகோலாக அமைகிறது.

6. கற்பித்தல்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றவரின் கருத்துக்களை மதிப்பது முக்கியம் என்ற கருத்தை கற்பிக்கிறது. மக்களின் யோசனைகள் இந்த உலகத்திற்கு நன்மை செய்ய முடியும், மிகவும் மகிழ்ச்சியான இடமாக இந்த உலகம் திகழ முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது.

7. கலைஞர்களுக்கு ஊதியம் பெறுவதை உறுதி செய்தல்: பாடகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பிற படைப்பாளிகள் அவர்களுடைய பணிக்காக சில சமயம் சரியான ஊதியம் பெறுவதில்லை. இந்த தினம் அவர்களின் கடின உழைப்புக்கான வெகுமதி பெறுவதை உறுதி செய்கிறது. கலைஞர்கள் தான் ரசித்த விஷயங்களை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அனைவரும் பயன் பெறலாம்.

8. பிராண்டுகளை பாதுகாத்தல்: பிரபல நிறுவனங்களும் அமைப்புகளும் தங்களது நிறுவனத்திற்கான லோகோக்களையும் பெயர்களையும் பாதுகாத்துக்கொள்ள அறிவுசார் சொத்துரிமை உதவுகிறது. இவற்றை மற்றவர்கள் காப்பியடிக்கவோ தவறாக உபயோகிக்கவோ முயன்றால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களுக்கும் சரியான நிறுவனத்தில் இருந்து பொருட்கள் கிடைப்பதற்கும் இது உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சாப்பிடும்போது பேசக்கூடாது! ஏன் தெரியுமா?
intellectual property rights

9. போட்டியை ஊக்குவித்தல்: சிறிய நிறுவனங்களிடமிருந்து பெரிய நிறுவனங்கள் யோசனைகளை திருடுவதை அறிவுசார் சொத்துரிமை தடுக்கிறது. சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான நியாயமான போட்டியை ஊக்குவிக்கிறது மற்றும் அனைவருக்குமான வெற்றியையும் உறுதி செய்கிறது.

10. உடல்நலம், பாதுகாப்பு: மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரியும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் உறுதி செய்கிறது. அதேசமயம் புதிய சிகிச்சை முறைகள், மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன. அவை உலக மக்களின் வாழ்வை காப்பதற்கு உதவுகிறது.

11. எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கிறது: அடுத்த தலைமுறை படைப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கிறது. தங்கள் யோசனைகள் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் பெரிய அளவில் கனவு காணவும் தங்களுக்கான சொந்த அடையாளத்தை உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மொத்தத்தில் அறிவுசார் சொத்துரிமை தினம் சட்ட விதிகள், புதுமை, படைப்பாற்றல், நேர்மை மற்றும் அனைவரின் கருத்துக்கள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மதிப்பை உணர்ந்து செயல்படுவதையும் கலாசாரத்தை போற்றிப் பாதுகாப்பதையும் வலியுறுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com