சோளக்கொல்லை பொம்மைகளின் சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?


சோளக்கொல்லை பொம்மை
சோளக்கொல்லை பொம்மை
Published on

ச்சைப்பசேல் என்ற நெல் வயல்வெளியின் நடுவில், தானியத் தோட்டங்களில் வயிற்றில் வைக்கோலை அடைத்துக்கொண்டு பருத்த உடலுடன், தலையில் கவிழ்த்த சட்டியுடன் பார்த்தவுடன் சிரிக்கும் தோற்றத்துடன் இருக்கும் சோலைக்கொல்லை பொம்மைகள். இவை எங்கே, எப்போது தோன்றின என்கிற வரலாற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தோற்றம்: உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களில் இந்த பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் சிறப்புகளைக் கொண்டிருந்தன. ஆங்கிலத்தில், ‘ஸ்கேர்குரோக்கள்’ என்று அழைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மையின் தாயகம் கிரேக்கத்தைச் சேர்ந்தது. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய கிரேக்கத்தில் திராட்சைத் தோட்டங்களில் இருந்து பறவைகளை பயமுறுத்துவதற்காக கடவுளின் மகன் என்று கருதப்பட்டவரின் மரச்சிலைகள் வைக்கப்பட்டன. அதே நேரத்தில் எகிப்தில் விவசாயிகள் நைல் நதிக்கரையில் உள்ள தங்கள் கோதுமை வயல்களை காடைகளிடமிருந்து பாதுகாக்க வலைகளால் மூடப்பட்ட மரச்சட்டங்களை பயன்படுத்தினர்.

ஜப்பானிய ஸ்கேர்குரோக்கள்: ஜப்பானில் ‘ககாசி’ என்று அழைக்கப்படும் ஸ்கேர்குரோக்கள் பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகளில் மக்களைப் போலவே உருவாக்கப்பட்டன. மேலும், பறவைகள் மற்றும் பிற பூச்சிகளை பயமுறுத்துவதற்கு அந்த பொம்மைகளின் கைகளில் ஆயுதங்கள் கூட வழங்கப்பட்டன.

ஐரோப்பா: ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், வறட்சி மற்றும் பஞ்சத்தைக் கொண்டுவருவதாகக் கருதப்படும் தீய ஆவிகளைத் தடுக்கும் ஒரு வழியாக, மக்களைப் போலவே இருக்கும் வைக்கோல் பொம்மைகளை வயலில் விட்டுச் செல்வார்கள்.

ரோமானிய சோளக்கொல்லை பொம்மைகள்: ரோமானியர்கள் கிரேக்கர்களின் யோசனையை தழுவி ஐரோப்பா முழுவதும் அவற்றின் பயன்பாட்டை அதிகரித்தனர். அவர்களுடைய வயல்வெளிகளில் பெரும்பாலும் பழைய ஆடைகளை உடுத்திய மர உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து பயந்துபோன பறவைகளும் பிற உயிரினங்களும் அவற்றை நெருங்குவதற்கு அஞ்சின.

இடைக்கால ஐரோப்பா: ஐரோப்பாவில் இடைக்காலத்தில் பறவையை பயமுறுத்துபவர்கள் என்று அழைக்கப்படும் சிறு வயது சிறுவர்கள் வயல்களில் ரோந்து செல்வார்கள். பயிர்களில் வந்து அமரும் பறவைகள் மற்றும் பூச்சி இனங்களை பயமுறுத்துவதற்காக மரக்கட்டைகளை ஒன்றாக சேர்த்து தட்டி ஒலி எழுப்புவார்கள்.

அமெரிக்க பழங்குடியினர்: பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் தங்கள் மக்காச்சோள வயல்களில் இருந்து பறவைகளை துரத்த எண்ணி மரக்கம்பங்கள் மற்றும் விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட ஸ்கேர்குரோக்களை பயன்படுத்தினர். அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் பின்னிருந்த முறைகளை பின்பற்றினர்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் நபரா? உளவியல் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

சோளக்கொல்லை பொம்மை

நவீன பயன்பாடு: நவீன விவசாயம் பெரும்பாலும் பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனாலும், சில பகுதிகளில் இன்னும் சோளக்கொல்லை பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கலாசார சின்னம்: சோளக்கொல்லை பொம்மைகள் பல்வேறு கலாசாரங்களில் நீடித்த அடையாளமாக மாறிவிட்டன அவை பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகள் இலக்கியம் மற்றும் பிரபலமான அமெரிக்க ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளன. சில நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் தங்கள் கற்பனையில் சோளக்கொல்லை பொம்மைகளை உருவாக்கி காட்சிப்படுத்துகின்றனர். அதற்கான போட்டிகள் வைக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பன்: ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளித்த பயிர் வகைகள் மக்களுக்கும் மற்றும் அவற்றை உண்ணும் வனவிலங்குகளுக்கும் தீங்கு செய்கின்றன. ஆனால், சோளக்கொல்லை பொம்மைகள், பறவைகள் மற்றும் பிற உயிர்களிடமிருந்து பயிர்கள் அழிவதைத் தடுத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருந்தது. உலகெங்கும் உள்ள சோளக்கொல்லை பொம்மைகள் வளமான வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com