ஜப்பானியர்களின் பணம் சேர்க்கும் டெக்னிக் தெரியுமா?

Do you know the Japanese technique of adding money?
Do you know the Japanese technique of adding money?https://tokyocheapo.com

ரு மனிதர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் அதை சேர்த்து வைப்பதில்தான் அவரது திறமை அடங்கியுள்ளது. சம்பாதித்த பணத்தை தாறுமாறாக செலவழித்து விட்டால் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது. ஜப்பானியர்கள் கடினமாக உழைப்பதில் மட்டுமல்ல, பணம் சேர்ப்பதிலும் வல்லவர்கள். அதற்கு அவர்கள் ஒரு டெக்னிக்கை கையாள்கிறார்கள். அது என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஜப்பானியர்கள் அரிகாத்தோ (Arigato) என்ற தத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதன் பொருள் நன்றி. ஜப்பானியர்கள் எல்லாவிதமான செயல்களிலும் நன்றியுணர்வை வெளிப்படுத்துவார்கள். நன்றி நன்றி என்று தினமும் பலமுறை சொல்வது அவர்களது வழக்கம். நன்றி உணர்வு ஜப்பானிய கலாசாரத்தின் ஒரு மிக முக்கியமான பகுதியாகும்.

கடவுள் தமக்கு தந்திருக்கும் இந்த நல்ல வாழ்க்கை மட்டுமல்ல, பொருள், பணம் என்று அனைத்து விஷயங்களுக்குமே நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஜப்பானியர்கள். ஒரு ஜப்பானியர் செல்வந்தராகவோ அல்லது ஓரளவு பணம் உடையவராகவோ அல்லது ஏழையாகவோ கூட இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களுக்கு நன்றி சொல்வது வழக்கம்.

தாங்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் முதல் அனைத்திற்கும் நன்றி சொல்வார்கள். அவற்றின் மீது இணையற்ற மரியாதையும் பாராட்டும் வைத்திருப்பார்கள். இந்த ஆழ்ந்த நன்றி உணர்வை பணத்திற்கும் கடைப்பிடிக்கிறார்கள்.

பணத்தைப் பெருக்குவதில் பயன்படும் அரிகாத்தோ தத்துவம்: தாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு யென்னிற்கும் நன்றி தெரிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, செலவழிக்கும் பணத்திற்கும், முதலீடு செய்யும் பணத்திற்கும், பிறருக்கு பணம் தரும்போதும் ஒவ்வொரு பைசாவிற்கும் நன்றி சொல்கிறார்கள். ஏதாவது பொருட்களை வாங்கிவிட்டு பணம் தரும்போது கடனே என்று தராமல் நன்றி சொல்லித் தருகிறார்கள். அவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டக்டர் டிக்கெட் கொடுத்தால் நன்றி சொல்லித்தான் டிக்கெட் பெறுகிறார்கள். ஒவ்வொரு பைசாவையும் நன்றி சொல்லி செலவழிப்பதன் மூலம் அவர்கள் புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுக்கிறார்கள்.

பணத்திற்கு மரியாதை செலுத்துதல்: பணத்தை சரியான இடத்தில் வைத்திருப்பார்கள். பர்சில் வைத்திருந்தாலும் அதை கசங்கல் இல்லாமல் நன்றாக நேர்த்தியாக அதை ஒழுங்காக வைத்திருப்பார்கள். கசங்கியோ, அழுக்காகவோ சுருட்டலாகவோ இருக்காது.

தாராளமாகக் கொடுத்தல்: கொடுக்கும் செயல் பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது நன்றியுணர்வு சுழற்சியை வலுப்படுத்துகிறது தானமாக பிறருக்கு பணத்தைக் கொடுக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் தருகிறார்கள். இதனால் அவர்களுடைய பணம் இரட்டிப்பாகிறது. தங்களிடம் பணம் பெற்றுக் கொள்பவர்களிடம் கூட நன்றி சொல்வது அவர்களது உயர்ந்த பண்பு. பிறருக்குத் தரும் அளவுக்கு தங்களிடம் நிதி உள்ளது என்பதற்கான மனநிறைவுக்கான அடையாளமாக நன்றி சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கோடை காலத்தில் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்! 
Do you know the Japanese technique of adding money?

அதைப்போல, தங்கள் நண்பர்களுக்கு பரிசுகளை வழங்கும்போதும் உண்மையான அன்புடன் பரிசளிக்கிறார்கள். நன்றி சொல்லி பரிசளிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அவர்கள் ஒவ்வொரு முறையும் பணத்தை கொடுக்கும்போதும் பெறும்போதும் நன்றி உணர்வுடன் இருப்பது பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேவையில்லாத செலவுகளை செய்வதை தடுக்கிறது.

ஜப்பானிய கலாசாரமும் நமது இந்தியக் கலாசாரத்தை நிறையவே ஒத்திருக்கிறது. நாமும் பணத்தை மகாலட்சுமி என்று சொல்வோம். பணத்தை மிகவும் மதிப்போம். அதை பத்திரமான இடத்தில் வைப்பது வழக்கம். பணப்பெட்டிக்கு வாரத்தில் ஒருமுறையாவது பூவைத்து, சாம்பிராணி பத்தி காட்டி வழிபடுவது வழக்கம். பணத்தை தேவையில்லாத இடங்களில் வைக்க மாட்டோம். இடது கையால் பணம் பெறவோ, கொடுக்கவோ மாட்டோம். பணத்தை மதிக்கும் விஷயத்தில் இந்தியக் கலாசாரத்தை ஒத்திருக்கிறது ஜப்பானியக் கலாசாரமும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com