திருநெல்வேலி அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு?

திருநெல்வேலி அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு?

திருநெல்வேலி அல்வாவின் பூர்வீகம் தெரிந்தால் அனைவருமே ஆச்சரியப்படுவோம். நியாயமாக இதை, ‘சொக்கம்பட்டி அல்வா’ என்றே அழைக்கப்பட வேண்டும். சொக்கம்பட்டி அல்வா திருநெல்வேலி அல்வா ஆனது எப்படி என்பது ஒரு  சுவாரஸ்யமான கதை.

திருநெல்வேலியின் பூர்வீக இனிப்பு ஸ்பெஷல் சீனி மிட்டாயே. காலப்போக்கில் அல்வா மிகவும் புகழ் பெற்று விட்டது. அதுவும் இருட்டுக்கடை அல்வா மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தென்காசி, புளியங்குடி சாலையில் உள்ள சொக்கம்பட்டி என்ற ஊர் ஒரு காலத்தில் ஜமீனாக இருந்துள்ளது. அந்த ஜமீனில் உள்ள குதிரைகளுக்கு நல்ல தரமான உணவளிக்க வட இந்தியர்கள்  சிலர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய பராமரிப்பில் இந்த ஜமீனில் இருந்த குதிரைகள் நன்கு போஷாக்குடன் வளர்ந்தன. அவர்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுகளில் ஒன்றுதான் இந்த சொக்கம்பட்டி அல்வா.

காலப்போக்கில் அந்த ஜமீன் அழிந்த உடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு வேலை இல்லாமல் போகவே, அவர்கள் திருநெல்வேலியில் குடியேறினார்கள். அவர்களில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ண சிங் என்பவரின் மகன் பிஜிலிசிங் என்பவர் தாமிரபரணி நீர் எடுத்து அல்வா தயாரித்தார். அந்த அல்வாவை சுவைத்த திருநெல்வேலி மக்கள், அதன் சுவையில் மயங்கி அடிமை ஆனார்கள். இந்த பிஜிலி சிங் என்பவர்தான் இருட்டுக்கடை அல்வா கடையை தொடங்கி வைத்தவர். நாளடைவில் இது புகழ் பெற்று விளங்கியது. இவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகள்தான்  இன்னும் இந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர்.

1940ல் தொடங்கப்பட்ட இந்த அல்வா கடை, நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படும் இந்தக் கடை திருநெல்வேலியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com