பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ரகசியம் தெரியுமா?

Puri jagannath temple mystery
Puri jagannath temple mysteryImage Credits: Adobe Stock
Published on

ந்தியக் கோயில்கள் பல அதிசயங்களுக்கும், ஆச்சர்யங்களுக்கும் மட்டுமல்ல, பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருப்பதற்கும் பெயர் பெற்றவையாகும். கேரளாவில் உள்ள பத்மநாப ஸ்வாமி கோயில் தொடங்கி, இப்போது பூரி ஜெகந்நாதர் கோயில் வரை பொக்கிஷ அறை ரகசியம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஒரிசாவில் அமைந்த பூரி ஜகந்நாதர் கோயிலில் இருக்கும் பொக்கிஷ அறை 46 வருடங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கிறது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் ஆலயம், பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்களால் வெள்ளி, தங்கம், வைரம், வைடூரியம் என்று ஏராளமான விலைமதிப்பற்ற செல்வங்களை கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நகைகளெல்லாம் பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பொக்கிஷ அறை 1978ல் கடைசியாகத் திறக்கப்பட்டது. இந்தப் பொக்கிஷ அறை தரைக்கு கீழே கடலை ஒட்டியிருக்கும் பகுதியாகும். அதிக வருடங்களாக திறக்காமல் இருந்ததால், அதன் நிலைமையை ஆராய 1984ல் தொல்லியல் துறை குழு ஒன்று உள்ளே சென்றது. ஆனால், பொக்கிஷ அறையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும், பாம்புகள் சீறியதாகவும் கூறி அந்தக் குழு திரும்பி வந்துவிட்டது. அதன் பிறகு 2018ம் ஆண்டு பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போய்விட்டதாகவும், அந்த சாவி தமிழ்நாட்டில்தான் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. 46 வருடத்திற்குப் பிறகு இப்போது கடந்த 14.7.2024ல் அந்தப் பொக்கிஷ அறை திறக்கப்பட்டிருக்கிறது.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் உள்ள, ‘ரத்னபந்தர்’ என்கிற பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. ஒரிசா அரசாங்கம் அந்த பொக்கிஷ அறையை திறப்பதற்கு 11 பேர் கொண்ட குழுவை நியமித்தார்கள். 14.07.2024 ல் ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லா சடங்குகளும் செய்யப்பட்டு சரியாக பகல் 1.28 மணிக்கு பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இந்த ரத்னபந்தர் பொக்கிஷ அறையில், வெளிப்புற அறை மற்றும் உள்புற அறை என இரண்டு அறைகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
திப்பு சுல்தானையே அதிர வைத்த சிவன் கோவில் எது தெரியுமா?
Puri jagannath temple mystery

வெளிப்புற அறையில் இருந்த எல்லா நகைகளையும் கோயில் வளாகத்தில் இருக்கும் ரூமிற்கு எடுத்துவந்து வைத்துவிட்டார்கள். ஆனால், உட்புற அறையின் பூட்டை திறக்க சாவி இல்லாததால் அந்த அறையின் பூட்டை உடைத்து திறந்திருக்கிறார்கள். பொக்கிஷ அறையில் எந்த பாம்பும், அமானுஷ்யமும் தென்படவில்லை என்று அந்தக் குழு கூறியிருக்கிறது.

அரசு அனுமதி தந்ததும் நகைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. கடைசியாக,1978ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 128.38 கிலோ தங்கமும், 221.53 கிலோ வெள்ளியும் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நகைகளெல்லாம் அப்படியே இருக்கிறதா? என்பது கணக்கெடுப்புக்கு பின்னர்தான் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com