மெழுகுவர்த்தி உருவான கதை தெரியுமா?

Do you know the story of the candle?
Do you know the story of the candle?a.everyday-psychology.com
Published on

ற்போது ஒளி தருவதற்கு பல வண்ண விளக்குகளும், மின்சாரமும் வந்து விட்டாலும் இன்றும் மெழுகுவர்த்தியின் மவுசு குறையவில்லை. விதவிதமான நிறங்களிலும், வண்ணங்களிலும் வரும் மெழுகுவர்த்தியை பர்த்டே பார்ட்டி போன்ற விழாக்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. மெழுகுவர்த்தி புனிதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தேவாலயங்களில் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெழுகுவர்த்தியை முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் ஆவர். இவர்கள் விலங்கின் கொழுப்பில் இருந்து இதை தயாரித்தார்கள். இது, விலங்கின் கொழுப்பில் செய்யப்பட்டதால் ஒருவிதமான வாடையை கொடுக்கக்கூடியதாக இருந்தது.

அதன் பிறகு சீனர்கள் மெழுகுவர்த்தியை திமிங்கிலத்தின் கொழுப்பைப் பயன்படுத்தி கண்டுபிடித்தனர். அதற்கு முன்பு விலங்கின் கொழுப்பில் செய்யப்பட்ட விளக்கையே இரவில் ஒளிக்காகப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலத்தில்தான் தேனிகளின் மெழுகிலிருந்து மெழுகுவர்த்தி செய்யப்பட்டது. இது நன்றாக எரியக்கூடியதாகவும், இனிமையான வாசம் கொண்டதாகவும் இருந்தது. எனவே இதை தேவாலயங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அதன் பிறகு 18ம் நூற்றாண்டில் திமிங்கிலத்தின் உயிரணுவிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவகை எண்ணை, மெழுகுவர்த்தியின் தயாரிப்புக்கு பெரிதும் உதவியது. இது மிகவும் பளிச்சிடும் வெளிச்சத்தை கொடுத்தது. இதுவரை செய்ததிலேயே நிலையான மெழுகுவர்த்தியை திமிங்கிலத்திடமிருந்து எடுக்கப்பட்ட மெழுகை வைத்தே செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1834ல் ஜோசப் மார்கன் என்பவரே மெழுகுவர்த்தி உருவாக்குவதற்கு மிஷினை கண்டுபிடித்தார். இது ஒரு மணி நேரத்தில் 1500 மெழுகுவர்த்தியை உருவாக்கியது. இது குறைந்த விலையில் நிறைய மக்களுக்கு மெழுகுவர்த்தி சென்று அடைய பேருதவியாக இருந்தது.

19ம் நூற்றாண்டில் பிரைஸ் கேன்டில் என்பவரே பேராபின் மெழுகை வைத்து எரியக்கூடிய மெழுகுவர்த்தியை கண்டுபிடித்தார். என்னதான் மெழுகுவர்த்தியின் வளர்ச்சி மாற்றமடைந்துகொண்டே போனாலும் மண்ணெண்ணை விளக்கு, குமிழ் விளக்கு போன்றவற்றின் முன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. பின்பு இவற்றின் வளர்ச்சியால் மெழுவர்த்தி வெறும் அழகுக்காகவும் அலங்கரிக்கும் பொருளாகவுமே உபயோகப்படுத்தப்படுகிறது.

சங்ககாலம் முதல் இடைக்காலம் வரை இந்தியாவில் குச்சுகளை கொண்டு தீ மூட்டி இரவில் ஒளியேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிறகு மண்ணெண்ணை விளக்கை பயன்படுத்தினர். சீனாவின் வழியாகவே மெழுகுவர்த்தி இந்தியாவிற்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும் தெரியுமா?
Do you know the story of the candle?

மெழுகுவர்த்தியை பற்றவைக்கும்போது, நெருப்பு மெழுகை உருகச் செய்யும். அப்படி உருகிய மெழுகை நுண்புழை நுழைவின் மூலம் மெழுகுதண்டு மேலே இழுக்கும். உருகிய மெழுகை நெருப்பு ஆவியாக மாற்றும். இதனால் நீரகக்கரிமம் ஆக்ஸிஜனுடன் செயல்புரிந்து ஹைட்ரஜன் மற்றும் கார்பனாக உடைக்கப்படும்.

ஆடம்பரமான மெழுகுவர்த்திகள் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட மெழுகு, சோயா மெழுகு, தேனியிடமிருந்து எடுக்கப்பட்ட மெழுகு போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இது தலைவலியை கொடுப்பதில்லை. சாதாரண பேரப்பினை விட சோயா மெழுகு சீக்கிரம் எரியக்கூடியதாகவும் 50 சதவிகிதம் அதிகமாக வாசனையை கொடுக்கூடியதாகவும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com