உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் ஆச்சரியம் தெரியுமா?

mouse statue in russia
mouse statue in russiahttps://9gag.com
Published on

லிகள் இல்லாத நாடே இல்லை என்று கூறலாம். நம் வீட்டில் எலி வந்தால் நாம் என்ன செய்வோம்? அதை அடித்துக் கொன்று விடுவோம் அல்லது அதை பொறியில் பிடித்து வெளியே கொண்டு சென்று விட்டு விடுவோம். எலி நமக்குக் கொடுத்த தொந்தரவு அப்படி நம்மைச் செய்ய வைக்கிறது. எலிகள் அடிக்கும் லூட்டி கொஞ்சமா நஞ்சமா என்கிறீர்களா? சரி, விஷயத்துக்கு வருவோம். உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு ஒன்று இருக்கிறது. இந்த ஆச்சரியம் எங்கே? ஏன்? எதற்காக? என்று அறியத் தோன்றுகிறதுதானே?

ஆராய்ச்சிக் கூடத்தில் உயிரிழக்கும் ஏலிகளை நினைவு கூறும் வகையில் இப்படிப்பட்ட சிலைகளை வைக்கிறார்கள். மனித வாழ்வியல் முறையை மேம்படுத்த பல்வேறு விதமான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்தின் செயல் திறனை கண்டறிய முடிகிறது. அறிவியல் ஆராய்ச்சியின் தொடக்கம் முதல் தற்போது வரை இந்த முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது.

மனித உயிர்களுக்கு ஏற்றாற்போல் எலிகளின் உடல் கூறியல் உடலியல் மற்றும் மரபணு உள்ளது. மேலும், அதன் எடை, குறுகிய கால வாழ்க்கை சுழற்சி, எளிமையான பராமரிப்பு முறை போன்றவை உயிரியல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எலிகளை ஏதுவாகக் கண்டறிய காரணமாக அமைகிறது.

இதையும் படியுங்கள்:
யாருக்கும் கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
mouse statue in russia

இந்நிலையில், இப்படிப் பல்லாயிரக்கணக்கான ஆய்வுக்கூடங்களில் உயிரிழக்கும் எலிகளை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் வகையில் ரஷ்ய நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நோவாசி பிரஸ்க் பகுதியில் அமைந்துள்ள சைடாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில்தான் இந்த எலி சிலை வைக்கப்பட்டுள்ளது. கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு துணியை பின்னுவது போன்று கைகளில் ஊசியுடன் டிஎன்ஏ பின்னுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு விதமான காரணங்களுக்காக சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எலியின் சிலை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. எப்படி இருக்கு பார்த்தீர்களா? மவுசுக்கு வந்த மவுஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com