ஒடிசாவின் ஒப்பற்ற பாரம்பரிய ஓவியங்களை அறிவோமா?

Pattachithra Painting
Pattachithra Painting
Published on

ந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒடிசா, அதன் பாரம்பரிய ஓவியங்கள் உட்பட அதன் வளமான கலாசார பாரம்பரியத்திற்காக புகழ் பெற்றது. இந்தக் கலை வடிவங்கள் மாநிலத்தின் வரலாறு, புராணங்கள் மற்றும் மத நடைமுறைகளுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளன. ஒடிசாவின் சில முக்கிய கலாசார ஓவியங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பட்டச்சித்ரா தோற்றம்: ‘பட்டச்சித்ரா’ என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான ‘பட்டா’ (கேன்வாஸ்) மற்றும் ‘சித்ரா’ (படம்) ஆகியவற்றிலிருந்து வந்தது. இந்தக் கலை வடிவம் ஒடிசாவில் பழைமையான மற்றும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இது கி.மு. 5ம் நூற்றாண்டுக்கு முந்தையது.

நடை மற்றும் நுட்பம்: பட்டச்சித்ரா ஓவியங்கள் அவற்றின் நுணுக்கமான விவரங்கள், புராணக் கதைகள் மற்றும் துடிப்பான வண்ணங்களுக்காக அறியப்படுகின்றன. தாதுக்கள், காய்கறிகள் மற்றும் பிற கரிம மூலங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை சாயங்கள் மற்றும் நிறமிகளைப் பயன்படுத்தி கலைஞர்கள் வரைகின்றனர். கேன்வாஸ் பழைய துணியின் அடுக்குகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பின் சுண்ணாம்பு மற்றும் கோந்து கலவையால் பளபளப்பாக மாறுகிறது.

கருப்பொருள்கள்: இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளையும், ஜெகநாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தெய்வங்களையும் கருப்பொருள்களாகக் கொண்டும் பட்டச்சித்ரா ஓவியங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ரகுராஜ்பூர் கிராமம் பட்டாச்சித்ரா கலைஞர்களுக்கு பிரபலமானது. அவர்கள் இந்தப் பாரம்பரிய கலை வடிவத்தை தலைமுறை தலைமுறைகளாகப் பாதுகாத்து வருகின்றனர்.

Manjusha painting
Manjusha painting

2. மஞ்சுஷா ஓவியம் தோற்றம் மற்றும் வரலாறு: பாம்பு ஓவியம் என்றும் அழைக்கப்படும் மஞ்சுஷா ஓவியம், மாநிலத்தின் பாரம்பரிய பாணியை பறைசாற்றுகிறது. இவை மூங்கில் மற்றும் சணல் மூலம் செய்யப்பட்ட பெட்டிகள் அல்லது பானைகளில் செய்யப்படுகின்றன. பிரகாசமான வண்ணங்களில் வங்காளம் மற்றும் ஒடிசாவின் பிரபலமான நாட்டுப்புறக் கதையான பிஹுலா-பிஷாரியின் கதையை சித்தரிக்கின்றன.

3. தல பட்டச்சித்ரா பொருட்கள் மற்றும் செயல்முறை: இது பனை ஓலைகளில் செய்யப்பட்ட பட்டச்சித்ராவின் தனித்துவமான மாறுபாட்ட வடிவமாகும். இலைகள் கீற்றுகளாக வெட்டப்பட்டு, ஒன்றாக தைக்கப்பட்டு, பின்னர் ஒரு எழுத்தாணி மூலம் கருப்பு அல்லது வெள்ளை மை கொண்டு படங்களை வரைகின்றனர்.

கருப்பொருள்கள்: பட்டச்சித்ராவைப் போலவே, இந்த ஓவியங்கள் பெரும்பாலும் புராணக் கதைகள், தெய்வங்கள் மற்றும் இதிகாசங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன.

4. சௌரா ஓவியம்: சௌரா ஓவியங்கள் ஒடிசாவின் சௌரா பழங்குடியினரால் உருவாக்கப்படும் சுவரோவியங்களின் ஒரு பாணியாகும். ஐகான்கள் என்றும் அழைக்கப்படும் இவை பார்வைக்கு வார்லி ஓவியங்களைப் போலவே இருக்கின்றன. இது அவர்களின் மத நடைமுறைகள் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை சித்தரிக்கின்றன.

chaura painting
chaura painting

பாணி மற்றும் நுட்பம்: ஓவியங்களின் பின்னணி சிவப்பு அல்லது மஞ்சள் காவி மண்ணிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் மென்மையான மூங்கில் தளிர்களால் வடிவமைக்கப்பட்ட தூரிகைகளைப் பயன்படுத்தி வரையப்படுகிறது. மண், அரிசி பேஸ்ட் மற்றும் தாவர சாறுகளில் இருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துகின்றன.

கருப்பொருள்கள்: அன்றாட வாழ்க்கை, பழங்குடி சடங்குகள், சௌரா புராணங்கள் மற்றும் மரபுகள் பற்றிய நாட்டுப்புறக் கதைகள்.

இதையும் படியுங்கள்:
விதவிதமான நிறங்களில் பால் தரும் விலங்குகள் பற்றித் தெரியுமா?
Pattachithra Painting

5. ஜோதி சிட்டா: ஜோதி சிட்டா என்பது திருவிழாக்கள் மற்றும் விசேஷ சமயங்களில் பெண்களால் வரையப்படும் ஒரு பாரம்பரிய ஓவியமாகும். இது முதன்மையாக வீடுகளின் சுவர்கள் மற்றும் தளங்களில் உருவாக்கப்பட்டது.

உடை மற்றும் நுட்பம்: அரிசி மாவின் பேஸ்ட்டைப் பயன்படுத்தி  விரல்களால் வரையப்படுகின்றன. மேலும், அவை பூக்கள், விலங்குகள் மற்றும் மத சின்னங்கள் போன்ற உருவங்களை உள்ளடக்கியது.

கருப்பொருள்கள்: இந்த ஓவியங்கள் பெரும்பாலும் சடங்குகளுடன் தொடர்புடையவை மற்றும் ஆசீர்வாதம் மற்றும் செழிப்பை பிரதிபலிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com