தகி அண்டி என்றால் என்னனு தெரியுமா?

தகி அண்டி என்றால் என்னனு தெரியுமா?

தகி அண்டி பாகவதத்தில், மேலே உறியில் கட்டப்பட்டிருந்த வெண்ணெயை கண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து களவு கொண்டு அதைச் சாப்பிட்டான் என்று வருகிறது. இந்நிகழ்வு பக்தர்களைக் கவர்ந்த விஷயமாகும்.

வடமாநிலம், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் தகி அண்டி விழா பிரபலமானது. மிகவும் உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள தாழிக்குள் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுவதோடு, பண முடிச்சும் கட்டப்படுகிறது.

இதை உடைக்க, கோவிந்தாக்கள் என அழைக்கப்படும் சிறுவர்கள், இளைஞர்கள் பிரமிடு அமைத்து மேலே ஏறி செயல்படுவார்கள்.

இந்த கோவிந்தாக்கள் யூனிஃபார்ம் மாதிரி டீஷர்ட்டை ஒரே கலரில் அணிந்துகொண்டு குழுக்களை அமைத்துக்கொள்வார்கள். மூன்று அல்லது நான்கு தகி அண்டி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். ப்ரைவேட் லாரி, கார், மோட்டார்பைக் என வைத்துக் கொண்டு இங்குமங்கும் சர்ரெனப் பறப்பார்கள். கோவிந்தாக்கள் பிரமிட்டில் ஏறுகையில், இசை வாத்தியங்கள் ஒலித்த வண்ணம் இருக்கும். தவிர, அவர்களை ஏற விடாமல் தடுக்க, கீழே இருந்து அவர்கள் மீது தண்ணீர் அல்லது மஞ்சள் கலந்த நீரை பீய்ச்சி அடிப்பார்கள். சில இடங்களில் தகி அண்டியை உடைக்கும் கோவிந்தாக்களுக்கு பரிசு `21,000/-, ` 11,000/- என்று பல அமைப்புகள் அறிவிப்பு செய்வதும் உண்டு. சுமார் 2 -3 மணி நேரங்கள் நடக்கும் இந்நிகழ்வு சுவாரசியமானதாக இருக்கும். மும்பையில் ஆங்காங்கு டிராபிக் ஜாம் ஆகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com