அம்பானி வீட்டுத் திருமண விழாவில் திரையுலகப்  பிரபலங்கள் நடனமாடியது ஏன் தெரியுமா?

அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடிய ரஜினி
அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடிய ரஜினிhttps://tamil.latestly.com
Published on

மீபத்தில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் இந்தியாவின் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நடனமாடினது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது பேசுபொருளாக இருந்து வருகிறது. வட இந்திய திருமணங்களில் நடனம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மற்றும் வெளிப்படுத்தவும் நடனத்தை ஒரு இன்றியமையாத நிகழ்வாக வட இந்தியர்கள் கருதுகிறார்கள். அதற்கான காரணம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நடனம் அதிர்ஷ்டத்தின் அறிகுறி: வட இந்தியத் திருமணங்களில், நடனம் மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை தூண்டுவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது. நடனம் உருவாக்கும் கலகலப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை புதுமண தம்பதிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் நடனம் ஆடுவார்கள்.

பிரபலங்களின் நடனம்: உயர்தர திருமணங்களில் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். இவர்களின் நிகழ்வுகள் அந்த விழாவிற்கு கவர்ச்சியையும் உற்சாகத்தையும் சேர்க்கின்றன. பிரபலங்களின் திருமணத்தில் நடன நிகழ்ச்சி நடத்துவது அந்த நிகழ்வின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் உயர்த்துகிறது. அம்பானி குடும்பம் பல பாலிவுட், கோலிவுட் மற்றும் பல இந்திய நட்சத்திரங்களுடன் நட்பு ரீதியான இணைப்பில் உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்த மற்றும் திருமண  நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இந்த நிகழ்விற்கு வசீகரமும் சேர்க்கிறார்கள். அதில் நடனமாடுவதன் மூலம் கலாசார செழுமையும் சேர்க்கிறார்கள்.

சமூகத்தின் கவனம்: சமூகப் பிரபலங்கள் திருமண நிகழ்ச்சிகள் பொதுவெளியில் குறிப்பிடத்தக்க  கவனத்தை ஈர்க்கின்றன. நிகழ்வின் பார்வை மற்றும் விளம்பரத்தை மேம்படுத்துகின்றன. இது திருமண வீட்டினர் மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மீடியாக்கள் திரை நட்சத்திரங்களின் நடனங்களை பதிவு செய்து பொதுவெளியில் பகிரும்போது  அவை வைரலாகி, சமூகத்தின் கவனத்தை கவர்கிறது.

விருந்தினர் அனுபவம்: பிரபல திரை  நட்சத்திரங்கள் நடனம் ஆடும்போது அது திருமண வீட்டினர், விருந்தினர்கள், திருமணத்தில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் மறக்க முடியாத மற்றும் இனிய அனுபவத்தைத் தருகிறது. இது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியும் அதிகப்படுத்துகிறது. இந்தத் திருமணம் மறக்க முடியாத நிகழ்வாக மாறுகிறது . அம்பானி குடும்ப பிரம்மாண்டமான திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் மகிழ்ச்சியான சூழலை பெருக்கி கொண்டாட்ட உணர்வுக்கு பங்களிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அம்மாக்களின் மனஅழுத்தம் - ஆய்வுகள் அளிக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடிய ரஜினி

இந்தத் திருமணத்தில்  ரஜினிகாந்த் நடனமாடியபோது அதை மிகவும்  ரசித்தவர்கள் பலர். ‘சூப்பர் ஸ்டாருக்கு இது தேவையா?’ என்பது போலவும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவேற்றினார்கள். ஆனாலும், தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவர் நடனமாடியதை ரசித்தவர்கள் அதிகம். ரஜினியின் நடனத்திற்குக் கிடைத்த வரவேற்பு அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.

திரைப்பட நடிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் இதுபோன்ற உயர்தர திருமண நிகழ்வுகளில் பங்கேற்பது அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த திருமண வீட்டிற்கு தங்கள் ஆதரவையும் மரியாதையும் காட்டுவதற்காகவும் மற்றும் அவர்களின் குடும்பத்துடனான உறவை அங்கீகரிப்பதற்கான ஒரு வழியாகவும் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com