ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரர்கள் ஏன் பதக்கத்தை கடிக்கிறார்கள் தெரியுமா?

Do you know why Olympic medalists bite their medals?
Do you know why Olympic medalists bite their medals?Image Credits: iNews
Published on

லகளவில் ஒலிம்பிக் கொண்டாடுவதன் காரணம், நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் அமைதியை வளர்ப்பதற்காக இளைய சமுதாயத்தை விளையாட்டின் மூலமாக எந்தப் பாகுபாடுமின்றி ஒன்றிணைப்பதாகும். தற்போது 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் மாநகரில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 32 வகையான விளையாட்டுகளை 19 நாட்களுக்கு தொடர்ந்து விளையாடப் போகிறார்கள்.

ஒலிம்பிக் என்றதும் உடனே நினைவுக்கு வருவது, பதக்கங்கள்தான். அதிலும் தங்கப் பதக்கத்தை ஒவ்வொரு விளையாட்டிலும் யார் வெல்லுவார்கள் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருக்கும். ஆனால், பதக்கம் வென்ற வீரர்கள் ஏன் தங்கப்பதக்கத்தை கடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்கள் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தங்கப்பதக்கத்தைக் கடிக்கும் பழக்கம் எப்போதிலிருந்து உருவானது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், 1900 ஆண்டுகளின் முற்பகுதியில் முழுக்க தங்கத்தால் ஆன பதக்கங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில், தங்கம் மிகவும் மென்மையான உலோகமாகும். பண்டையக் காலத்தில் பதக்கம் தங்கத்தில்தான் செய்திருக்கிறார்களா? என்பதை அறிந்துக் கொள்ள அதைக் கடித்து சோதித்துப் பார்த்தார்கள். அவ்வாறு கடிக்கும்போது தங்கமாக இருந்தால் அதில் பற்களின் அச்சுப் பதியும் என்பதற்காகவேயாகும்.

தற்போது கொடுக்கப்படும் பதக்கம் முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டதில்லை. அதில் 92.5 சதவிகிதம் வெள்ளியும் வெறும் 6 கிராம் தங்கமுமே உள்ளது. வெள்ளி பதக்கத்தில் வெள்ளியும், இரும்பும் கலக்கப்படுகிறது. வெண்கலப் பதக்கத்தில் copper, Zinc, Iron சேர்க்கப்படுகின்றன.

எனினும், தற்போது உள்ள விளையாட்டு வீரர்கள் அதன் உண்மைத்தன்மையை அறிவதற்காகப் பதக்கத்தை கடிப்பதில்லை. புகைப்படம் எடுப்பதற்கு அவ்வாறு போஸ் கொடுப்பது சிறப்பாக இருப்பதனாலேயாகும். அவ்வாறு புகைப்படம் எடுக்கையில் அது வெற்றியையும், சாதனையையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
13ம் நம்பர் ஏன் அபசகுனமாகக் கருதப்படுகிறது தெரியுமா?
Do you know why Olympic medalists bite their medals?

தற்போது உள்ள ஒலிம்பிக்ஸில் பதக்கத்தைக் கடிப்பது என்பது  புகைப்படக் கலைஞர்களுக்கு Iconic shot ஆக கருதப்படுகிறது. 2010ம் ஆண்டு luger david moeller என்னும் விளையாட்டு வீரர் தன்னுடைய வெள்ளிப் பதக்கத்தை கடித்து போஸ் கொடுக்கும் போது அவருடைய பற்களை உடைத்துக்கொண்டார்.

எனினும், ஒலிம்பிக்ஸின் வெற்றியை ஒரே புகைப்படத்தில் காட்டுவதற்கு இந்த Iconic shot தேவைப்படுவதாக நினைக்கிறார்கள். தங்கப்பதக்கம் முழுமையான தங்கமாக இல்லாவிட்டாலும், புகைப்படக் கலைஞர்கள் கேட்கும் வரை விளையாட்டு வீரர்களும் தங்கள் பதக்கத்தை கடித்து போஸ் கொடுக்கத்தான் செய்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com