மேலை நாடுகளில் ஸ்வஸ்திக் சின்னம் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவது ஏன் தெரியுமா?

Swastik symbol
Swastik symbol

ஸ்வஸ்திக் சின்னம் பரவலாக உலகம் முழுவதுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மிகவும் புனிதமாகக் கருதப்படும் ஸ்வஸ்திக் சின்னம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேறுவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் புனிதச் சின்னம்: இந்தியாவில் ஸ்வஸ்திக் சின்னம் இந்துக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புனிதமான மற்றும் மங்கலகரமான சின்னம் ஆகும். இது நல்ல அதிர்ஷ்டம், வளமை, செழிப்பு மற்றும் நல்வாழ்வை குறிக்கிறது. இந்த ஸ்வஸ்திக் என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது. இதற்கு தமிழில் ‘நல்வாழ்வுக்கு உகந்த சின்னம்’ என்று பொருள். இந்தச் சின்னம் இந்தியாவில் கோயில்கள், வீடுகள் மற்றும் மதச்சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பௌத்தம் மற்றும் சமணத்தில் ஸ்வஸ்திக்: பௌத்த மதத்தில் ஸ்வஸ்திகா புனிதமாகக் கருதப்படுகிறது. இது புத்தரின் கால் தடங்களைக் குறிக்கிறது மற்றும் நித்தியத்தின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. சமண மதத்தில் இது ஏழாவது தீர்த்தங்கரரைக் குறிக்கிறது. இது நம்பிக்கையின் முக்கிய அடையாளமாக அங்கு கருதப்படுகிறது.

கலாசார முக்கியத்துவம்: ஸ்வஸ்திகா பல்வேறு கலாசார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் போன்ற மங்கலகரமான நிகழ்வுகளுடன் தொடர்புடைய ஒரு நேர்மறையான அடையாளமாக இந்த சின்னம் கருதப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஸ்வஸ்திக் சின்னத்தின் குறியீடு:

வரலாற்று சூழல்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்வஸ்திக் சின்னம் மேலை நாடுகளில் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. கட்டடக்கலை, விளம்பரம் மற்றும் ஆடை உட்பட பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஜெர்மனியில் ஹிட்லர் நாஜி கட்சியை ஆரம்பித்து அதன் சின்னமாக ஸ்வஸ்திக்கை வைத்தபோது இந்த சூழ்நிலை அப்படியே மாறியது. 1930 வரை மேற்கத்திய நாடுகளில் இது ஒரு சுப / நல்ல நிகழ்வுகளுக்கான குறியீடாகக் கருதப்பட்டது.

நாஜிக்களின் அடையாளம்: இச்சின்னத்தை முதல் உலகப்போரின்போது பல நிறுவனங்கள் தமது நிறுவனக் குறியீடாகப் பயன்படுத்தினர். இதை ஜெர்மனியின் தேசியவாதத்தின் பெருமையாகக் கருதி. நாஜிக் கட்சிகள் இதைப் பயன்படுத்தின. நாஜிக்கள் ஸ்வஸ்திகாவை தங்கள் சின்னமாக ஏற்றுக்கொண்டனர். இது இனத்தூய்மை மற்றும் ஆரிய மேலாதிக்கத்தின் சின்னத்துடன் அதை இணைத்தது. இரண்டாம் உலகப்போரின்போது நடைபெற்ற அட்டூழியங்களை இது பிரதிபலிப்பதாக அமைந்தது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள் ஆமை புகுவது அபசகுனம் ஆகுமா?
Swastik symbol

மேலை நாடுகளின் கண்ணோட்டம்: ஜெர்மனியின் பகை நாடுகள் இதை பயங்கரவாதத்தின் குறியீடாகவும் கருதினர். இதை ஹிட்லரின் நாஜிக்கட்சி பயன்படுத்தியதால் இச்சின்னம் இன்றும் பல நாடுகளில் இனப்பாகுபாடு & அச்சுறுத்தல் தொடர்பான சின்னமாகவே கருதப்படுகிறது. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இது ஒரு எதிர்மறைச் சின்னமாகக் கருதப்படுகிறது. இதை பயன்படுத்துவது ஒரு குற்றம் என்பது போன்ற பார்வையை அங்கே ஏற்படுத்தும்

பாரம்பரிய இந்திய ஸ்வஸ்திகா பெரும்பாலும் புள்ளிகளுடன் அல்லது பல்வேறு வடிவமைப்பு நிலைகளில் சித்தரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹிட்லரின் நாஜிக்கட்சியில் ஸ்வஸ்திகா 45 டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும். இதற்கு கூடுதல் அலங்காரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க. ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்வஸ்திக் சின்னம் ஆழமான வேறுபட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இது ஆன்மிகம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் ஆழ்ந்த மரியாதைக்குரிய அடையாளமாக உள்ளது. மேற்கத்திய சூழலில் நாஜிக்களின் நடத்தை காரணமாக அது வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக மாறி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com