ஈட்டிகளுடன் பாய்ந்து வரும் குதிரைகள்! நடுங்க வைக்கும் பசோலா திருவிழாவின் பின்னணி!

Basola festival
Basola festival
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சோலா என்பது சும்பாவில் நடைபெறும் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வாகும். லம்போயா (Lamboya), கோடி (Kodi), வனோகாகா (Wanokaka) மற்றும் கௌரா (Gaura)என தீவின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஒரு சடங்கு குதிரைப் போராகும். இது முன்னோர்கள் மற்றும் ஆவிகளை கௌரவிப்பதுடன் ஆண்டு முழுவதும் நல்ல அறுவடை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இதை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளிப்பதும் ஆரவாரம் செய்து கொண்டாடுவதுமாக இருக்கும்.

இந்தோனேஷியாவின் சும்பா குதிரைகள் மற்றும் மலைகளின் தீவு சிறந்த கலாச்சார தளமாகும் பசோலா திருவிழா (Pasola Festival) ஒரு தனித்துவமான கலாச்சார நிகழ்வு. பசோலா திருவிழா என்பது சும்பா மக்களால் ஆண்டுதோறும் நடவு பருவத்தின் வருகையை குறிக்கும் ஒரு பாரம்பரிய சடங்காகும். ஆடம்பரமான அறுவடை சடங்குகளில் ஒன்றான இது சும்பானியர்களால் நிகழ்த்தப்படும் ஒரு பழங்கால போர் சடங்காகும்.

இந்த விழாவில் 50 ஆண்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரையில் ஏறி ஒரு போலிப் போரை நடத்துவார்கள். எதிரெதிர் குழுக்களாகப் பிரிந்த வீரர்கள், சேணம் இல்லாத குதிரைகளின் மீது வேகமாக குதிரை சவாரி செய்து, கூர்மையற்ற மர ஈட்டிகளை ஒருவரையொருவர் நோக்கி எறிந்து சண்டையிடுவார்கள்.

இது பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நான்கு வாரங்களுக்கு நடைபெறும். நையேல் எனப்படும் ஒருவகை கடல் புழுவின் வருகையை பொறுத்து இவ்விழா இருக்கும். நிகழ்வுக்கு முன், பெரியவர்கள் கடல் புழுக்களின் தோற்றம் போன்ற இயற்கை அறிகுறிகளின் அடிப்படையில் சடங்குகளை செய்கிறார்கள். இந்தப் புழு கரைக்கு நீந்தும் பொழுது, அது மழைக்காலத்தின் முடிவையும், பயிர் நடவு தொடக்கத்தையும் குறிக்கிறது.

குதிரையில் சவாரி செய்யும் வீரர்கள் சடங்குப் போரில் மர ஈட்டிகளுடன் ஒருவரையொருவர் தாக்கி கொள்கிறார்கள். எதிரிகளை நோக்கி ஈட்டிகள் வீசப்படும். அவர்கள் ஆயுதங்களின் தாக்குதலை தவிர்க்கவேண்டும். மரத்தால் ஆன ஈட்டியின் முனைகள் மழுங்கி இருந்தாலும் கடுமையான காயம் அல்லது சில சமயம் மரணம் போன்ற கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படி சிந்தப்படும் ரத்தம் நிலங்களை வளமாக்கும் என்றும், எதிர்காலத்தில் அதிக அறுவடைக்கு வழிவகுக்கும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வெறும் பொம்மை அல்ல; பெண்களின் கனவுச் சின்னம்! 'பார்பி' உருவான கதை தெரியுமா?
Basola festival

சும்பா என்பது பாலிக்கு மிக அருகில் வெறும் ஒருமணி நேர விமான பயணம் மூலம் இந்த அற்புதமான தீவை அடையலாம். இது நவீன வளர்ச்சி மற்றும் சுற்றுலாவால் பாதிக்கப்படாமல் அதனுடைய மரபுகள் மற்றும் நிலப்பரப்புகளை பாதுகாத்து வருகிறது. கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய கிராமங்களைக் கொண்டது.

இந்தோனேசியாவின் நுசா தெங்காரா திமூரில் உள்ள ஒரு பெரிய தீவான சும்பா 10,710 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு ஈட்டிகளை ஏந்திய குதிரை வீரர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையேயான ஒரு சடங்கு போரின் வடிவத்தில் நடைபெறும்.

இது எதிரெதிர் சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலைக் குறிக்கிறது. ஆவிகளை அமைதிபடுத்தவும், நல்ல அறுவடையை ஏற்படுத்தவும் கொண்டாடப்படும் பசோலா திருவிழா இது. ஆசியாவின் மிகவும் வித்தியாசமான அறுவடை தொடர்பான பண்டிகைகளில் ஒன்றாகும்.

logo
Kalki Online
kalkionline.com