EVM came to prevent fraud in elections
EVM came to prevent fraud in electionshttps://www.indiatvnews.com

தேர்தலில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க வந்ததுதான் EVM!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இந்தியத் தேர்தல் களத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

இந்தியாவில் தேர்தல் மோசடி, ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியில் EVMகளின் தாக்கத்தை ஆராய்கிறது இந்தக் கட்டுரை. தேர்தல் முறையை வலுப்படுத்துவதிலும் குடிமக்களை மேம்படுத்துவதிலும் இவற்றின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

EVMகளின் அறிமுகம்: இந்தியாவில் முதன்முதலாக 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட மாநில சட்டமன்றத் தேர்தலின்போது ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே சோதனை அடிப்படையில் EVMகளுடன் வாக்கு செலுத்தும் பணியானது துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக 2001ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பாரம்பரிய காகித வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவந்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நோக்கம்: இதன் முக்கிய நோக்கமே தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவது, செலவுகளைக் குறைப்பது மற்றும் தேர்தல் மோசடிகளைத் தடுப்பது ஆகும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் குரல்களை வலுப்படுத்துவதன் மூலம்தான் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இயந்திரங்களால் எளிதாக்கப்பட்ட திறமையான மற்றும் துல்லியமான வாக்குப்பதிவு நடைமுறைகள் இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் போன்ற சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இது பெரும் பயனளிக்கிறது.

EVMகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர்களுக்கு வாக்குப் பெட்டியுடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு தேர்வுக்கும் உரிய பட்டனை வழங்குவதன் மூலமாக வேலை செய்கின்றன.

* ஒரு வாக்காளர் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு உரிய பட்டனை அழுத்தினால், இயந்திரம் தன்னைத்தானே வாக்கை சேகரித்துக்கொள்ளும். அதன்படி ஒரு நபருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்.

* ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலுமே EVMகள் வாக்குச் சாவடி கட்டுப்பாட்டு அதிகாரியால் நிர்வகிக்கப்படும். இந்த இயந்திரமானது பேட்டரியின் உதவியோடு இயங்குகின்றன.

* பொதுவாக தேர்தலில் ஒரு தொகுதியில் 64 வேட்பாளர்கள் வரை இடம் பெறலாம் மற்றும் இவை சுமார் 10 ஆண்டுகள் வரை வாக்குகளை சேமித்து வைக்கும்.

* இறுதியாக. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் வைக்கப்பட்டால் மீண்டும் மாற்ற முடியாது. இதன் மூலம் தேர்தலில் ஏற்படும் மோசடியைத் தடுக்க முடிகிறது.

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான மற்றும் பாதுகாப்பான வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

NOTA (None of the Above) சேவை: இந்தியாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இறுதியில் இடம்பெற்றுள்ள தேர்வுதான் NOTA. இது வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்த, அனுமதிக்கும் ஒரு தேர்வாகும். நோட்டா 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், அரசியல் கட்சிகளின் கறைபடிந்த வேட்பாளர்களை தடுக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஏர்பிரையர் பயன்படுத்துவதன் சாதக, பாதகங்கள் தெரியுமா?
EVM came to prevent fraud in elections

தேர்தலில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்பட்டதா?

பொதுவாக, தேர்தலில் நடக்கக்கூடிய முறைகேடுகளை தடுக்கும் விதமாகத்தான் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இவை குறித்த பல்வேறு சர்ச்சைகளும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களும் சூழ்ந்துள்ளன.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் EVMகள் உள்ளிட்டவை சேதப்படுத்துதல் மற்றும் கையாளுதலுக்கு ஆளாகின்றன என்பதைக் காட்டுகின்றன. உதாரணமாக, நெதர்லாந்தில், EVMகள் சில நிமிடங்களில் தொலைவில் இருந்து ஹேக் செய்யப்பட்டதால், இந்த இயந்திரங்கள் திரும்பப் பெறப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டன. அதோடு கூடுதலாக, ஆய்வுகள் இந்திய EVMகளில் குறிப்பிட்ட பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன. அதில் நேர்மையற்ற நபர்களால் இயந்திரங்களை குற்றவாளிகள் அணுகி தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும் என்பதைக் குறிக்கிறது. மேலும், இதுபோன்ற விஷயங்கள் EVM களின் நேர்மை மற்றும் மோசடிக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com