க்ஷேத்ர கலா புரஸ்கார் விருதை வென்றார் சிக்கில் மாலா சந்திரசேகர்.. குவியும் பாராட்டுக்கள்!

சிக்கில் மாலா சந்திரசேகர்
சிக்கில் மாலா சந்திரசேகர்
Published on

புல்லாங்குழல் கலைஞர் சிக்கில் மாலா சந்திரசேகர் க்ஷேத்ர கலா புரஸ்கார் 2023 விருதை பெற இருக்கிறார் .

குருவாயூரில் உள்ள மேல்பத்தூர் ஆடிட்டோரியத்தில் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி அஷ்டமி ரோகிணி விழா நடைபெறவுள்ளது. இதில், புல்லாங்குழல் கலைஞர் சிக்கில் மாலா சந்திரசேகர் இந்த விருதை பெற்றுக்கொண்டு தனது புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கட்டிப் போட உள்ளார். 1989ஆம் ஆண்டு முதல் கோவில் கலை வடிவங்களை ஊக்குவிக்கும் வகையில் குருவாயூர் தேவஸ்தானத்தால் க்ஷேத்ர கலா புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருதை புல்லாங்குழல் கலைஞர் சிக்கில் மாலா பெறவுள்ளார்.

இந்த விருது குருவாயூரப்பனின் படம் பொறிக்கப்பட்ட 10 கிராம் தங்க லாக்கெட்டுடன், ரூ 55,555/- பணப் பரிசும் மற்றும் விருது பாத்திரமும் உள்ளடக்கியது. இந்த செய்தி இணையத்தில் பரவ, இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சிக்கில் மாலா சந்திரசேகர் ஒரு சிறந்த புல்லாங்குழல் கலைஞர் ஆவார். அவர் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். மத்திய அரசின் மிக உயரிய விருதான சங்கீத் நாடக் அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சங்கீத் நாடக் அகாடமி விருது பொறும் சிக்கில் மாலா சந்திரசேகர்
சங்கீத் நாடக் அகாடமி விருது பொறும் சிக்கில் மாலா சந்திரசேகர்

மாலாவிற்கு கல்கி குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்த போது, இன்று கூட அவருக்கு சென்னையில் கலா ரத்னா விருது வழங்கப்படவுள்ளது என்னும் இனிய செய்தியை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது : " இதுவரை எத்தனை விருதுகள் பெற்றுள்ளேன் என்று தெரியவில்லை. ஆனால் , விருது வாங்குவதை விட புல்லாங்குழலின் இசையால் அனைவருக்கும் இன்பத்தை அளித்து சந்தோஷப்படுத்துவதே எனக்குப் பெரும் விருது போன்றது. எனது இசையால் அனைவருக்கும் ஒரு பாசிட்டிவ் வைப் தர முடியும் என்பதும் எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. உள்ளுணர்வோடு எதை செய்தாலும் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். பல இடங்களுக்கு சென்று நான் உள்ளார்ந்து புல்லாங்குழலை வாசிக்கிறேன். கடவுள் எனக்கு அதற்கான பலனாக இந்த விருதுகளைக் கொடுக்கிறார்."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com