

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முனைவர் அ.கா.பெருமாள், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளை ஆய்வுசெய்து இதுவரை நாட்டுப்புறவியல் தொடர்பாக மட்டும் 57 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் ஆய்வு செய்துள்ள கலைகள் 103. அவற்றில் தற்போது வழக்கத்தில் இல்லாத சில கலைகள் பற்றிய அரிய தகவல்களை நமக்கு அளிக்கிறார்...
எக்காளம் எருமைக் கொம்பால் செய்யப்பட்ட ஊதுகுழல் போன்ற இசைக்கருவி. இது சப்தமாக ஒலிக்கும். நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினராகிய தொட்டியம்பட்டு நாயக்கருக்குரியது. நாயக்கர் வாழ்வுடன் தொடர்புடையது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த நாயக்கர், வேளாண் தொழிலையும் மேய்ச்சல் தொழிலையும் செய்பவர்கள் என்றாலும் வேட்டையாடுவதை முக்கியமாகக்கொண்டிருந்தனர்.