

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
தெய்வம் வீற்றிருக்கும் கோயிலின் முன் உள்ள வளாகத்தில் பரந்த இடத்தில் (களம்) தெய்வத்தின் உருவத்தை வண்ணப் பொடிகளால் வரைவதும் அத் தெய்வத்தைப் போற்றிப் பாடுவதும் ஆகிய இரு கூறுகளைக்கொண்டது இக்கலை. கேரளத்தில் பரவலாக வளர்ந்த இக்கலை கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவியது. ஆனால், இப்போது அபூர்வமாகிவிட்டது.
காளி, துர்க்கை, சாஸ்தா, வேட்டைக்காரன், அய்யப்பன், நாகம் ஆகிய தெய்வங்களின் கோயில்களில் நேர்ச்சைக் கலையாக இது நிகழ்த்தப்படும். இக்கலை நிகழ்வில் படம் வரைவதும், பாடுவதும் முக்கியம். படத்தின் பரப்பளவை பொறுத்து இக்கலை நிகழ்த்தும் நேரம் அமையும்.