

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
தனியாட்டமாகவும், கணியான் ஆட்டத்தின் துணை ஆட்டமாகவும் ஆடப்படுவது அம்மன் கூத்து. தென் மாவட்டங்களில் அம்மன் கோயில் விழாக்களில் நிகழும் கலை இது. இக்கலை சடங்கு சார்ந்ததாகவும், அம்மனின் அருளைக் காட்டுவதாகவும் அமையும். கோயிலின் முக்கிய தெய்வம் இருக்கும் இடத்தின் முன்பகுதி வளாகமோ அல்லது அரங்கமோ இதன் ஆடுகளம்.
இந்நிகழ்ச்சியில் ஒருவரே பங்குகொள்கிறார். இவர் கணியான் குழுவைச் சேர்ந்தவராய் இருப்பார். உடம்பில் சாம்பல் பூசியிருப்பார். வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டி இருப்பார். கைகளில் வேப்பிலை வைத்திருப்பார். தோற்றமும் ஆட்டமும் அச்சமூட்டுவதாய் இருக்கும். கணியான் ஆட்டப் பெண் வேடக்காரரும் இந்த அம்மன் கூத்து ஆடுபவருடன் ஆடுவார்.