

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடநாடு எனப்படும் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் மட்டுமே நடந்த இக்கலை நாடகப் பாணியில் அமைந்தது. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் மலையாளிகள் மட்டுமே நடத்திய இக்கலை நிகழ்வில், தமிழ் உரையாடலும் பங்குபெற ஆரம்பித்தபின் நாஞ்சில் நாட்டுக் கோயில் விழாக்களிலும் இடம் பெற ஆரம்பித்தது. எல்லாம் 100 ஆண்டுகள்தாம். 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறைய ஆரம்பித்தது.