

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சியாகவும், பொழுதுபோக்கு விழாக்களில் தனி நிகழ்ச்சியாகவும் நிகழ்த்தப்பட்ட கலை இது. பாடல், உரையாடல், நடிப்பு என அமைந்தது. கோயில் வாகனம் வீதியில் வலம் வரும்போது ஒரு புறம் நிகழ்வது. பெரும்பாலும் பின்னிரவில் நிகழும். இந்தச் சிறு நிகழ்வில் ஒரு பெண், முதியவர் ஒருவர், கோமாளி, இளைஞராக வேடமிட்டவர் என நான்கு பேர் பங்குகொள்கின்றனர். இவர்கள் கரகாட்டக் குழுவிலுள்ள கலைஞர்களாக இருப்பர் . இந்த நிகழ்விற்கு ஒரு தவில், ஒரு நாதஸ்வரம் இரண்டும் பின்னணியாக இருக்கும்.