மும்பையின் கர்பா குவீன் (Garba Queen) -ஃபால்குனி பாதக்!

மும்பையின் கர்பா  குவீன் (Garba Queen) -ஃபால்குனி பாதக்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வராத்திரி விழா மைதானத்தில் கலக்கும் தாண்டியா (Dandiya) மற்றும் கர்பா (Garba Queen) ஃபால்குனி பாதக்.

ஃபால்குனி பாதக் மும்பையைச் சேர்ந்த பாடகி மற்றும் இளமைத் துடிப்புடன் நிகழ்வுகளை நடத்தும் சிறந்த கலைஞர். இவரது இசை குஜராத்திய பாரம்பரிய இசை வகைகளைச் சார்ந்ததாக இருக்கும். குஜராத்தி மற்றும் பிற சமூகங்களில் பிரபலமானவர். திரைப்படங்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடி பதிவு செய்துள்ளார். இவரது ஆல்பங்கள் மெல்லிசை மற்றும் அவற்றுடன் சித்தரிக்கப்பட்ட அழகான காதல் கதைகளுக்குப் பிரபலமானதாகும். இசை நிகழ்வுகளை 1998ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

மைனே பாயல் ஹை சங்காய்; ஆயி பர்தேஷ் சே; பரியோன் கிரானி; ஸாவன் மே போன்றவைகள் இவரது பிரபலமான பாடல்களாகும்.

பத்து வருடங்களுக்கு முன்பாகவே, இவர் ஒரு நவராத்திரி நிகழ்விற்கு ரூ. 2 கோடி சம்பளம் பெற்றவர். இவரது நிகழ்ச்சி என்றாலே ஸ்பான்ஸர்கள் அதிகம்தான்.

இந்த வருடம் மும்பை போரிவிலி(மேற்கு)யிலுள்ள ப்ரமோத் மகாஜன் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் இவரது show பத்து நாட்கள் (15ஆம் தேதி முதல் 24 வரை) நடைபெற விருக்கிறது. Book My Show மூலமாக டிக்கெட்கள் விற்பனையாக ஆரம்பித்துவிட்டன.

இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்த காரணம் குறித்து இவரிடம் கேட்கப்படுகையில், அது இயல்பாக அமைந்ததென கூலாக பதில் அளிக்கிறார்   இந்த Queen.

இந்த நவராத்திரி விழா களத்தில் இறங்கி பாட ஆரம்பித்துவிட்டால், அனைவரும் கலர்ஃபுல்லாக சுழன்று சுழன்று ஆடுவது மிகவும் ரம்மியமாக இருக்கும். சில நேரங்களில் ஃபால்குனி பாதக்கும் இணைந்து ஆடுவதுண்டு. இது நல்லதொரு உடற்பயிற்சியுமாகும்.

பாடலுடன் ஆடலும் சேர்ந்து ரசிப்பதிலேதான்

சுகம்! சுகம்! சுகம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com