கோல்டன் மெமரிஸ் ஆப் கோலிசோடா!

Golden Memories of Golisoda
Golden Memories of Golisodahttps://www.suryanfm.in

கோலி சோடா என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது தங்களின் மழலைப் பருவம்தான். சிறு வயதில் கோலி சோடாவை திறப்பதே ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆச்சர்யமான தருணமாக இருக்கும். அதில் இருக்கும் பளிங்கிக்காகவே கோலி சோடா வேண்டும் என்று அடம்பிடித்து வாங்குவதுண்டு. மற்ற கலர் சோடாக்களை திறப்பதற்கு ஓப்பனர் தேவைப்படுவது போல கோலி சோடாவிற்கு அது தேவைப்படுவதில்லை. கட்டை விரலை வைத்து அழுத்தியே திறந்துவிடலாம்.

கோலி சோடா என்பது கார்பன் ஏற்றப்பட்ட லெமன் அல்லது ஆரஞ்சு பிளேவரில் தயாரிக்கப்படும் பானமாகும். ஏப்ரல் - மே மாதங்களில்தான் இதன் விற்பனை அதிகரிக்கும்.

கோலி சோடா என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? கார்பன் ஏற்றப்பட்ட சோடாவை மூடுவதற்கு மூடிக்கு பதில் கோலியை பயன்படுத்தினர். கார்பன் ஏற்றப்பட்ட பானத்தில் இருந்து வரும் அழுத்ததால் கோலியும் அதில் சரியாகப் போய் பொருந்தி மூடி போல செயல்படும்.

ஹைராம் காட் என்பவரே முதலில் கோலி சோடாவை கண்டுப்பிடித்தவர் ஆவார். 1872ல் அவர் இந்த பாட்டிலுக்கான பேட்டன்ட் உரிமையையும் வாங்கிவிட்டார். இந்த பாட்டில் பிரிட்டீஸ் ஆட்சி செய்த நாடுகளிலெல்லாம் பிரபலமாக இருந்தது. இப்போதும் இந்த கோலி சோடா பிரபலமாக இருக்கும் இரு நாடுகள் இந்தியா மற்றும் ஜப்பானாகும். இந்தியாவில் கோலி சோடாவென்றும், ஜப்பானில் ரேமூன் என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் புகழ் மக்கள் மத்தியில் இன்றும் குறையாமல் உள்ளதால் பெரிய கடைகள், பார், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் இன்றும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சோர்வுற்ற மனம் புத்துணர்ச்சி பெற ஆலோசனைகள் ஐந்து!
Golden Memories of Golisoda

இதில் பயன்படுத்தும் பொருட்கள் உப்பு, தண்ணீர், பிளேவர்களாகும். பிறகு கார்பன் டையாக்ஸைட் அடைக்கப்பட்டு அந்த பாட்டிலை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக சுழற்றுவார்கள். அப்போதுதான் அழுத்தம் ஏற்பட்டு பளிங்கி பாட்டிலுக்கு மூடி போல செயல்பட்டு மூடும். இந்த பாட்டில்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை ஆகும்.

தமிழ்நாட்டில் முதன்முதலில் கண்ணுசாமி முதலியார்தான் கோலி சோடா தொழிலை தொடங்கினார். அவர் கோலி சோடா பாட்டில்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் குளிர்பானங்கள் பிரபலம் அடைந்தது. அந்த சமயம் கோலி சோடாவையும் மக்கள் அதிகம் வாங்க ஆரமித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com