மரபு மட்டுமல்ல மருத்துவமும்: செம்பு காப்பு அணிவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்!

செம்பு காப்பு மூலம் தாமிரக் குறைபாட்டை சமநிலைப்படுத்தி, ரத்த ஓட்டம், கொலாஜன் உற்பத்தி, பாக்டீரியா கட்டுப்பாடு, அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுவதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
copper-kaappu
copper-kaappu
Updated on

செம்பு காப்பு அணிவது பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் கடைபிடித்த மரபு. செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நம்பிக்கையை கொண்டிருந்தனர்.

தாமிரம்‌ உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்றவற்றில்  இயற்கையாகவே உள்ளன. அதிகளவு சிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உடலின் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். ஆய்வுகளின்படி செம்பு காப்பு அணிவது சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்க உதவும்.

எலும்பு தேய்மானத்தை சரிசெய்கிறது. இதன் மூலம் மூட்டு வலி, வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கலாம். நமது முன்னோர்கள் காலத்தில் காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. ஆன்டி-பாக்டீரியா வாக செயல்பட செம்பு பயன்படுத்தப்பட்டது.

இது உடலில் 99% பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு செம்பு முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும்.

நமது உடல் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகும். கொலாஜன் மற்றும் எலாஸ்டிகன் நமது இணைப்பு திசுக்களுக்கு மட்டுமன்றி நமது எலும்புகள் மற்றும் தோலின் கட்டமைப்புக்கும், சுருக்கங்களை குறைப் பதற்கும் கொலாஜன் மிகவும் அவசியமானதாகும்.

உடலில் தாமிர குறைபாடு ‌என்பது உயர் ரத்த அழுத்தத்திற்கும் கொழுப்பிற்கும் காரணமாக அமைகிறது. இதய‌ ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மிதமான செம்பு சேர்மானம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
நீண்ட நாள் வாழ ஆசையா? ஆயுளை நீட்டிக்கும் அதிசயக் குறிப்புகள்!
copper-kaappu

செம்புபானைத் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவது போல செப்பு காப்பு அணிவது உடலின் நலனுக்கு உகந்தது. தாமிர குறைப்பாட்டினால் உண்டாகும் அல்சைமர் நோயையும் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

இவ்வாறு பல்வேறு பலன்களை தரும் செம்பு காப்பு அணிந்து பலன் பெறுவோம்.

எங்கள் வீட்டில் பலரும் செம்பு காப்பு அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதை பார்க்கிறேன்.

logo
Kalki Online
kalkionline.com