தஞ்சை மண்ணின் கலைப்பொக்கிஷம்: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியத்தட்டு!

thanjavur-art-plates
thanjavur-art-plates
Updated on

தஞ்சை என்று சொன்னால் மிகச் சிறப்பானது தஞ்சாவூர் ஓவியத்தட்டு மிகவும் பரம்பரை கைவினைஞர்களினால் உருவாக்கப்படுகிறது. இது கம்மாளர் என்ற சமூகத்தினர் பரம்பரையாக செய்து வருகின்றனர்.

இதன் பெயர்கள் - சிறப்புகள்

தஞ்சாவூர் கலைத்தட்டு, ஓவியத்தட்டு, அலங்காரத்தட்டு என்ற பெயர்களும உண்டு. இது தஞ்சையில் உருவாக்கப்பட்ட செயற்கை அலங்காரப் பொருள்கள் ஆகும்.

இந்த வட்டமான தட்டு பரிசுப் பொருளாக உருவாக்கப் படுகிறது.

இத்தட்டு வெள்ளி, பித்தனை, செம்பு போன்ற உலோகங் களினால் நடுவில் கடவுள்கள் அல்லது தேவர்களின் உருவங்களுடன் புடைப்புரு சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்கப்படுகிறது.

இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடாக 1999-ல் "தஞ்சாவூர் ஓவியத்தட்டு " என 63 வது பொருளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் விணையைப் போல தஞ்சாவூர் கலைத்தட்டும் தஞ்சாவூரின் பெருமையை உணர்த்துகிறது.

இதன் வரலாறு

தஞ்சாவூர் ஓவியத்தட்டு இரண்டாம் சரபோஜியால் (1777 - 1832) தஞ்சை மராத்திய அரசு ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது கைவினைக் கலைஞர்களால் குறிப்பிட்ட ஒரு சிலருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பரிசுப் பொருளாக உருவாக்கப்பட்டது.

20-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த அலங்காரத் தட்டு தஞ்சாவூர் அரசாங்க நூதன காட்சிச் சாலையில் 2011-ல் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் நடராஜர், பதஞ்சலி தாமரைப்பூவின் மேல் நிற்கும் பார்வதி ஆகியவற்றின் உருவங்களுடன் புடைப்புச் சிற்பமாக தட்டின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் 'டூரின் மறைச்சீலை': அந்த உருவம் எப்படி வந்தது?
thanjavur-art-plates

தட்டு செய்யும் முறை

மொத்தமாக அலுமினிய தகடுகளை வாங்கி தேவையான சைசுக்கு வட்டமாக இழுத்து வெட்டி சமப்படுத்தி, டிசைனிங் ஒர்க் செய்வார்கள்.

பொதுவாக தஞ்சாவூர் தட்டு என்றால் மயில், நடராஜர் உருவம், விஷ்ணு, சரஸ்வதி பிள்ளையார் என சாமிகளையும், சிலவற்றில் தலைவர்கள் நடிகர்கள் படமும் அச்சுக்கள் செய்து வைக்கிறார்கள்.

250 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்தட்டு தயாரிக்கும் பணி இன்றும் நடக்கிறது. இதன் விலை 600 ரூபாயிலிருந்து 22 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com