

சர்க்கஸ் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை பல சதாப்தங்களாக மகிழ்வித்து வரும் ஒரு பாரம்பரிய கலை. இந்தியா மற்றும் உலகில் உள்ள புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிகளை பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிகள்:
ஜெமினி சர்க்கஸ்
1951இல் தொடங்கப்பட்டது இந்திய சர்க்கஸ் இன் அடையாளமாக கருதப்படுகிறது. இதன் பிரம்மாண்டமான விலங்குகள் சாகசங்கள் மற்றும் அக்ரோ பாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.
ராம்போ சர்க்கஸ்
1991 இல் நிறுவப்பட்ட நிறுவனம். நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விலங்குகள் இல்லாத நவீன சாகசங்கள் மற்றும் கோமாளி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
ஜம்போ சர்க்கஸ்
ஜெமினி சர்க்கஸ் உரிமையாளரால் 1977-ல் வாங்கப்பட்ட மற்றொரு பழமையான புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனம் ஆகும்.
தி கிரேட் பாம்பே சர்க்கஸ்
இந்தியாவின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட சர்க்கஸ் கம்பெனிகளில் இதுவும் ஒன்று. உலக அளவில் புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனியாக கருதப்படுகிறது.
உலக அளவில் புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிகள்:
சிர்க்டு சோலைஷ்
கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய நவீன சர்க்கஸ் நிறுவனம் ஆகும். பிரம்மாண்டமான தியேட்டர் அமைப்புகள் இசை மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது.
ரிங்லிங் பிரதர்ஸ் அண்ட் பெய்லி சர்க்கஸ்
அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க சர்க்கஸ் நிறுவனம் ஆகும்.
சர்க்கஸ் குரோன்
ஜெர்மனியில் உள்ள முனிச் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனம் ஆகும்.
வனவிலங்குகள் நல சட்டத்தால் வனவிலங்குகள் எண்ணிக்கை குறைந்ததாலும் கலை சார்ந்த சர்க்கஸ்கள் நடைபெற்று வருகிறது.
ஒரு காலத்தில் சர்க்கஸ் கம்பெனிகள் வருகிறது என்றால் அந்தப் பகுதி மக்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். சிங்கம் புலி சிறுத்தை யானை ஒட்டகம் குதிரை நீர்யானை என வித்தை காட்டாத மிருகங்களை கிடையாது.
இத்தகைய சர்க்கஸ் கம்பெனிகள் கிராமத்தில் நடைபெற்றால் கிராம மக்கள் கரும்புச் சோளம் இவற்றை குதிரை யானைகளுக்கு உணவாக வழங்குவது வழக்கம். தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சர்க்கஸ் கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது.
அவற்றில் ஜம்போ சர்க்கஸ் ராயல் சர்க்கஸ் பாம்பே சர்க்கஸ் என மூன்று கம்பெனிகள் மட்டுமே உள்ளன. சர்க்கஸ் கம்பெனிகளை வர்த்தக நிறுவனமாக பார்க்காமல் அதை ஒரு கலையாகவும் விளையாட்டு விஷயமாகவும் பார்த்து சலுகைகள் அறிவிக்கா விட்டால் எஞ்சியுள்ள சர்க்கஸ் கம்பெனிகளும் மூடக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
1940 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்க்கஸ் 1990 வரை பீக் பீரியடில் இருந்து வந்தது. ஒரு இடத்தில் சர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டால் தொடர்ந்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை நடைபெறும். பெரிய சர்க்கஸ் கம்பெனிகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவாகும்.
சர்க்கஸ் கம்பெனியில் உள்ள குழந்தைகள் நாலு ஐந்து வயதிலேயே பயிற்சி எடுக்கவேண்டும்.
தற்போது சர்க்கஸில் உள்ள மிருகங்களை ரெஸ்க்யூ சென்டர் மற்றும் யானைகளை கோவில்களுக்கும் மிருக காட்சி சாலைக்கும் அரசு உத்தரவுப்படி வழங்கிவிட்டார்கள்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சர்க்கஸை இடமாற்றம் செய்யும்போது நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் டென்ட்
அடித்து உடனடியாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும். தாமதமானால் நாள் ஒன்றுக்குக்கு ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
இந்தியாவில் முதன் முதலாக தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரி சர்க்கஸ், ஓரியண்டல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், பாம்பே சர்க்கஸ், போன்ற கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி சீரும் சிறப்புமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனிகள் காலமாற்றத்தால் சரிவை சந்தித்து வருவது வருந்தத்தக்கது. அரசாங்கம் இந்த தொழிலுக்கு சலுகைகள் அறிவித்து புத்துணர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், நம் சிறுவயது நினைவுகளோடு கலந்த ஒரு பாரம்பரிய கலைவடிவத்தின் தற்போதைய எதார்த்த நிலையை நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்வதோடு, அழியும் நிலையில் உள்ள இந்த கலைத்துறையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் பெறலாம்.