ஹோலி பண்டிகைக்கும் Pichkari-க்கும் இவ்வளவு பெரிய கதை உள்ளதா?

18th century pichkari
18th century pichkari
Published on

முதலில் பிச்காரி என்றால் என்ன என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். வட இந்தியாவில் ஹோலி பண்டிகையின்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் ஒன்று. Water gun என்றழைக்கப்படும் இதனை வைத்து வண்ண நீரை அடித்துக்கொள்ளாதவர்களே இல்லை. அந்தவகையில் Water gun என்றழைக்கப்படும் பிச்காரிக்கு இவ்வளவு பெரிய கதைகள் உள்ளது என்று சொன்னால் நீங்களே நம்பமாட்டீர்கள்.

பிச்காரிதான் ஹோலி பண்டிகை எந்தக் காலத்திலிருந்து கொண்டாடப்படுகிறது என்பதைத் தெரிந்துக்கொள்வதற்கான முக்கிய பொருளாக அமைந்தது. ஆம்! கிருஷ்ணா கோபியர்கள் மீது மூங்கில் குழாய்களின் மூலம்தான் வண்ண நீரை ஊற்றி விளையாடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனை நிறைய பாடல்களிலும் பயன்படுத்தியிருப்பார்கள்.

பிச்காரிக்கானக் காப்புரிமையை முதன்முதலில் 1896ம் ஆண்டு NASA இஞ்சினியரான JW Wolff என்பவர்தான் பெற்றார். ஆனால் ஹோலி பண்டிகையில் பிச்காரியை ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தியதாகக் கதைகள் கூறுகின்றன. அதன்படி பழங்காலத்தில் இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாட ஒரு பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். ஆனால் அப்போது அந்தப் பொருளுக்குப் பெயர் இடவில்லை என்பதும் சொல்லப்பட்ட உண்மை.

இந்தக் கதைகளுக்கு ஒரு ஆதாரம் உள்ளது. ஆம்! கர்நாடகா மாநிலத்தில் (அதாவது தென்னிந்தியாவில்) உள்ள பெள்ளூர் என்ற இடத்தில் உள்ள சென்னகேஷவா என்ற கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் பிச்காரிப் பயன்படுத்தி ஹோலி பண்டிகைக் கொண்டாடியது போல சிலைகள் உள்ளன. அந்தக் கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1513 AD காலக்கட்டத்தில் கிருஷ்ண தேவராயாவால் கட்டப்பட்ட ஹம்பி, மஹாநவமி திபா கோவிலில் பிச்காரியைப் பயன்படுத்திப் பெண்கள் ஹோலி விளையாடுவது போல சிலைகளும் செதுக்கப்பட்ட தொட்டிகளும் உள்ளன.

இந்த பிச்காரி 18ம் நூற்றாண்டுகளில் செம்பு மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்தது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் மூங்கில் பயன்படுத்தி பிச்காரியை செய்தனர். அதன்பின்னர் 19வது நூற்றாண்டிற்குப் பின்னர் தற்போது ப்ளாஸ்டிக்கிலும் பிச்காரி தயாரிக்கப்படுகிறது. தற்போது ஒரு பிச்காரியில் பல வண்ண நீர்களைப் பயன்படுத்தும் வகையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கோலிவுட் கொண்டாடிய ஹோலி பாடல்கள்!
18th century pichkari

கிருஷ்ணர் முதல் தற்போது வரை ஹோலி பண்டிகையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்திய முக்கியமானப் பொருள் என்றால் அது பிச்காரிதான். என்னத்தான் வளர்ச்சிப் பெற்றாலும், இயற்கையிலிருந்து செயற்கை பிச்காரி வரை வந்துவிட்டாலும், அது இல்லாமல் ஹோலி பண்டிகை முழுமையாகாது என்பது மட்டும் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com