சென்னை
சென்னை

சென்னை எப்படி தமிழ்நாட்டின் கேப்பிட்டல் ஆனது தெரியுமா?

Madras Day 2023
Madras Day 2023
Madras Day 2023

சென்னை மாநகரத்தின் 384 ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகரானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வணக்கம் வாழ வைக்கும் சென்னை என்ற வார்த்தையை போல ஒன்றும் தெரியாதவர்களை கூட இந்த நகரம் எப்படியோ தட்டி தடுமாறி எழ வைத்து வாழ வைக்கிறது என்று சொல்லலாம். சின்னதாக பனியார கடை போட்டால் கூட பிழைத்து கொள்ளலாம் என்றபடி சென்னையை பலரும் நம்பி பிழைப்பு நடத்து வருகின்றனர்.

1654ல் ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். பின்னர் அருகில் இருந்த கிராமங்கள் எல்லாம் படிப்படியாக மெட்ராஸ் பட்டணத்துடன் இணைந்தன. அந்தப் பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்டன. 1963ஆம் ஆண்டு அப்போதைய `மதராஸ் ஸ்டேட்' மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அன்றிலிந்து விரிவடைந்தது “தமிழ்நாடு” என்ற கோரிக்கை.

இந்திய நாட்டின் விடுதலைக்கு பிறகு 1950ல் இந்தியா குடியரசு நாடானது. அதையடுத்து 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதி மெட்ராஸ் மாநிலமாகவே தொடர்ந்தது. அந்த சமயத்தில் பெயர் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழத்தொடங்கியது.

தியாகி சங்கரலிங்கனார்
தியாகி சங்கரலிங்கனார்

குறிப்பாக விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் கோரி 1956ல் சாகும் வரை உண்ணா நோன்பை கடைபிடித்தார். சொல்லப்போனால் அந்த கோரிக்கைக்காகவே சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். 1961ல் அப்போதைய சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். இதையொட்டி ம.பொ.சியின் தமிழரசு கட்சி, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது.

காமராஜர், பெயர் மாற்றம் சாத்தியமில்லை என்று வெளிப்படையாக சொல்லாமல் , "அரசின் கடிதப் போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம்" என சமாதானம் பேசினார். ஆனால், அதை ஒப்புக் கொள்ள யாரும் தயாராக இருக்கவில்லை

பின்னர் பலமுறை ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த குரல்கள் எழுப்பட்டுள்ளன. இறுதியில் 1967ல் அண்ணா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த அரசியல் சட்டத் திருத்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் 1967, ஜூலை 18ல் கொண்டு வந்தார்.

நாடாளுமன்றத்திலும் இதற்கான சட்ட முன்முடிவு 1968 நவம்பர் 1ல் நிறைவேறியது.அதிகாரப்பூர்வமாக 1968ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பாலர் அரங்கத்தில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. பத்தாண்டுகளாக இந்தக் கோரிக்கைக்காக இறுதிவரை போராடிய அண்ணா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், இந்த விழாவில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், 1969ல் ஜனவரியில் தமிழ்நாடு என்ற பெயர் முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது என்பதே வரலாறு.

சுதந்திரத்துக்குப் பின்னர், 1947ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக “மெட்ராஸ்” தேர்வானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969ல் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது. மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டு வந்தது.

அப்போது, முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வந்தன. 1991ல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. 1995ல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே.மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோதும், தமிழ்நாட்டின் தலைநகருக்கு மெட்ராஸ் என்ற பெயரே நீடித்தது. ஆனால், சென்னை என்ற பெயரே நிலைக்க வேண்டும் என்பதற்காக, 1996ம் ஆண்டு ஜூலை 17ம்தேதி மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com