வீட்டிலேயே காய்ந்த பூக்களைக் கொண்டு மணமணக்கும் சாம்பிராணி செய்யலாம்!

வீட்டிலேயே காய்ந்த பூக்களைக் கொண்டு  மணமணக்கும் சாம்பிராணி செய்யலாம்!

வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்கள் என பூக்கள் உபயோகிக்காதவர்கள் யாருமே இல்லை. வாசனைக்காகவும், அழகுக்காகவும் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்களை பெண்கள் தலையிலும் சூடுவார்கள், சாமிக்கும் பயன்படுத்துவார்கள். ஆண்களும் சாமி கும்பிடும்போது பூக்களை சுவாமிக்கு வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூக்களின் அழகு ஒரு நாள் மட்டும்தான். அதன் பிறகு வாடி காய்ந்துவிடும். அதற்குப் பிறகு இந்த உலர்ந்த பூக்கள் குப்பைக்கு மட்டுமே செல்லும். அப்படி தினசரி சேரும் காய்ந்த பூக்கள் மட்டும் வீட்டுக்கு வீடு ஏராளமாக உள்ளது.

இனி, காய்ந்த பூக்களை நாம் குப்பையில் போட வேண்டாம். அதை உருமாற்றி சாமிக்கு சாம்பிராணியாக தூபம் போடுவோம் தூபம் போடும் சாம்பிராணியை நாம் காசு கொடுத்து கடையில்தானே வாங்குகிறோம். எளிதான பொருட்களாலும், இந்த உலர்ந்த பூக்களாலும் சுலபமாகவே நம்மால் வீட்டிலேயே சாம்பிராணி தயாரிக்க முடியும். அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்? வாங்க பார்க்கலாம்.

உலர்ந்த பூக்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளுங்கள். அதனுடன் காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், இரண்டு துண்டு கற்பூரம், சுத்தமான சாம்பிராணி கட்டிகள், அதனுடன் வாசனைக்காக சிறுது கிராம்பு மற்றும் பட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த அனைத்துப் பொருட்களையும் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சாம்பிராணி
சாம்பிராணிவிஜி

அதனுடன் நெய், சுத்தமான தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறிது பேஸ்ட் பக்குவத்துக்கு வந்தவுடன் அதை ஐஸ் க்யூப் டப்பா போன்றவற்றில் சிறிது சிறிதாக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதின் ஈரப்பதம் போகும் வரை தனியாக வைத்துவிடுங்கள். மறுநாள் தற்போது கிடைக்கும் க்யூப் சாம்பிராணி போன்றே இதுவும் அழகாக நமக்குக் கிடைத்துவிடும். இதை நீங்கள் வீட்டில் சாமிக்கு தூபம் போட பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com