வல்லரசு நாடான அமெரிக்கா அதன் ஆதிக்கத்தை பல ஆண்டுகளாக இந்த உலகத்தில் நிரூபித்து காட்டி வருகிறது. அப்படி அதன் தாக்கம் உலகளவில் உணரப்பட்டு மக்களை அதை சார்ந்து வைத்துள்ளன. அது இந்தியாவில் எப்படி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது மற்றும் இது துண்டிக்கப்பட்டால் என்ன நடக்கலாம்? தெரிந்து கொள்வோம்.
அமெரிக்கா - இந்தியா உறவு
அமெரிக்காவும் இந்தியாவும் பொருளாதார, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரக் களங்களில் பெரிய தொடர்பை கொண்டுள்ளன. பொருளாதார ரீதியாக அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இதுதான் குறிப்பிடத்தக்க வர்த்தக விஷயங்கள் மற்றும் வேலை உருவாக்கத்தை எளிதாக்குகிறது. காரணம் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அதே சமயம் இந்திய நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. இப்படி பொருளாதாரத்தில் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பது இரு நாடுகளின் வெளிப்படைத்தன்மைக்கு இன்றுவரை முக்கியமானதாக உள்ளது.
பாதுகாப்பு
பாதுகாப்பில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் ஈடுபடுகின்றன. இந்த முயற்சிகள் அவர்களின் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்துவதோடு இந்தோ-பசிபிக் என்ற சர்வதேச பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பையும் மேம்படுத்துகிறது. இது போக இந்தியாவிற்கு மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதிலும் அமெரிக்கா முக்கிய சப்ளையராக இருக்கின்றன. இது போன்ற காரணங்களால்தான் இந்தியா பாதுகாப்பு துறையில் உலகளவில் நான்காம் இடம் வகிக்க உறுதுணையாக இருக்கிறது.
தொழில்நுட்பம்
தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவும் இந்தியாவும் செயற்கை நுண்ணறிவு(AI), விண்வெளி ஆய்வு(NASA - ISRO) மற்றும் இணையப் பாதுகாப்பு(Cyber Security) உள்ளிட்ட, வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்பங்களில் கூட்டாக செயல்படுகின்றன. இதுதான் இந்தியாவில் புதுமைகள் வரத்தொடங்கவும் ஊக்குவிக்கிறது. இதுபோக வருங்கால நலனுக்காக காலநிலை மாற்றம் மற்றும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற உலகளாவிய சவால்களை இரு நாடுகளும் சேர்ந்து தங்கள் நலனுக்காக ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. இறுதியில் இவையெல்லாம் தான் நம் இந்திய தேசத்தின் சூழ்நிலைக்கேற்ப பல அற்புதமான முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது.
இந்த தொடர்பு இல்லை என்றால்?
இந்தியாவுடனான தொடர்பை அமெரிக்கா நிரந்தரமாக ரத்து செய்தால், அதன் விளைவுகள் இந்தியாவுக்கு கடுமையானதாக இருக்கும். இதன் தொடக்கம் பொருளாதார ரீதியாக இந்தியா குறைந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை எதிர்கொள்ளும். இது வேலை இழப்பு மற்றும் நாட்டின் மெதுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இன்னொரு புறம் பாதுகாப்புத் துறை பாதிக்கப்படும், இது இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களையும் அதன் வலிமையையும் பலவீனப்படுத்தும். தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவின் ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டால் நாம் இப்போது பயன்படுத்தும் பல புது கண்டுபிடிப்புகள் பின்னாளில் தடுக்கப்படும். செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி ஆய்வு போன்ற முக்கியமான பகுதிகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை மெதுவாக்கும். கலாச்சார ரீதியாக இரு நாடுகளின் மக்கள் உறவுகள் கல்விப் பரிமாற்றங்களை முற்றிலும் குறைத்து விடும்.
எனவே, அமெரிக்க - இந்திய உறவு பல்வேறு துறைகளில் பரஸ்பரம் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அது தான் இன்றைய சூழ்நிலையில் பல வழிகளில் அவர்களை சார்ந்தே நம் வாழ்க்கையை நகர வைக்கிறது. ஆக மேலே குறிப்பிட்டது போல உறவு முறிவு போன்ற சூழ்நிலை அமைவது அரிது. இருந்தாலும் பிறரை சார்ந்த ஒரு வாழ்க்கை ஓட்டம் எப்படி மாறலாம் என்பதற்கு இது கண்டிப்பாக ஒரு உதாரணமே.