இந்திய எல்லையில் தொங்கும் கண்ணாடி பாட்டில்கள் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா?

Indian border
Indian border
Published on

ந்தியா பாகிஸ்தான் எல்லையை நினைக்கும்போது நமக்கு முள்வேலிதான் முதலில் நினைவுக்கு வரும். பெரும்பாலான திரைப்படங்களில் முள்வேலியை பார்த்திருந்தாலும் அந்த வேலியில் தொங்கும் கண்ணாடி பாட்டில்களை கவனித்திருக்க மாட்டோம்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பில் இந்த தொங்கும் கண்ணாடி பாட்டில்கள் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களின் உயிரை காக்கும் சமிஞ்சைகளாக செயல்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் தொங்கும் கண்ணாடி பாட்டில்களின் பயன்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

அடர்ந்த காடுகள், உயரமான மலைகள் மற்றும் பனிப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைகள் செல்வதால் எல்லா இடங்களிலும் உயர் தொழில்நுட்ப சென்சார்களையும், சிசிடிவி கேமராக்களையும் நிறுவுவது சாத்தியமற்றது. ஏனெனில் கடுமையான பனி, மற்றும் மழை, மின்சாரம் இல்லாத நேரங்களில் மின்னணு சாதனங்கள் சரியாக வேலை செய்யாமல் போகக்கூடும்.

ஆனால் முள்வேலியில் தொங்கவிடப்பட்டுள்ள கண்ணாடி பாட்டில்கள் இயங்குவதற்கு மின்சாரமோ பேட்டரிகளோ அல்லது நெட்வொர்க்கோ தேவையில்லை . 24 மணி நேரமும் எத்தகைய நெருக்கடியான கால நிலையிலும் சிறப்பாக செயல்படும்.

பல்வேறு வண்ணங்களில் உள்ள காலி கண்ணாடி பாட்டில்களை இந்திய எல்லை வீரர்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக முள்வேலியில் கட்டி விடுகிறார்கள். பயங்கரவாதிகள் அல்லது காட்டு விலங்குகள் அல்லது ஏதேனும் ஊடுருவும் நபர்கள் இருட்டில் வேலியை தொட்டாலே கம்பிகள் நகர்ந்து இந்த பாட்டில்கள் மோதி 'டன் டன் 'என்ற சத்தத்தை எழுப்பும் . இந்த சத்தம் நீண்ட தூரத்திற்கு கேட்கும் என்பதால் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் இந்த சத்தத்தை கேட்டதும் உடனடியாக எச்சரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
உலகம் வியக்கும் நமது ராணுவ வலிமை!
Indian border

வெப்ப இமேஜிங் கேமராக்கள் மற்றும் லேசர் அலாரங்களை லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைத்திருந்தாலும் மலிவான இந்த கண்ணாடி பாட்டில் முறையை பராமரிக்க அதிக செலவு இல்லை . ஏனெனில் காலி பாட்டில்கள் எளிதில் கிடைப்பதால் மிகவும் மலிவானதாக இருப்பதோடு தொழில்நுட்பம் கிடைக்காத இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியமாக குறைந்து அடர்த்தியான மூடுபனியோடு காணப்படும். அத்தகைய வானிலையில் அதிநவீன கேமராக்களால் கூட ஊடுருவும் நபர்களை கண்டுபிடிக்க முடியாது. இதனால்தான் BSFவீரர்கள் இந்த தொங்கும் கண்ணாடி பாட்டில் போர் நுட்பத்தை அதிகமாக நம்புகின்றனர். அனைத்து வானிலைக்கும் எதிரான பாதுகாப்பு அமைப்பாக தொங்கும் கண்ணாடி பாட்டில்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com